சென்னையில் தயாரான மஹிந்திராவின் புதிய மினி எஸ்யூவி... செப்டம்பரில் ரிலீஸ்!

4 மீட்டருக்கும் குறைவான புதிய எஸ்யூவி மாடலை மஹிந்திரா நிறுவனம் களமிறக்க உள்ளது. மினி பொலிரோ மாடலாக வர இருக்கும் இந்த புதிய எஸ்யூவிக்கு TUV300 என்ற பெயரில் அழைக்கப்படும்.

இது பொலிரோவுக்கு மாற்றான மாடல் இல்லை என்றும் மஹிந்திரா தெரிவித்துள்ளது. குவான்ட்டோவை தொடர்ந்து 4 மீட்டருக்கும் குறைவான இரண்டாவது எஸ்யூவி மாடலாக இதனை மஹி்ந்திரா அறிமுகம் செய்ய இருக்கிறது.

பெயர் விளக்கம்

பெயர் விளக்கம்

TUV 300 என்ற பெயரில் T என்ற எழுத்து Tough என்றும், UVஎன்பது utility vehicle என்பதையும் குறிப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 300 என்பது வரிசை பெயராக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், எக்ஸ்யூவி 500 போன்றே இந்த டியூவி 300 என்ற பெயரில் இருக்கும் கடைசி இரு எழுத்துக்களை வழக்கம்போல் "ஓஓ" என்று உச்சரிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

சேஸீ

சேஸீ

புதிய தலைமுறை ஸ்கார்ப்பியோவில் இருக்கும் ஹெட்ரோஃபார்ம்டு சேஸீயின் நீளத்தை குறைத்து இந்த எஸ்யூவியில் பயன்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிசைன் ஸ்கெட்ச்...

டிசைன் ஸ்கெட்ச்...

சில டிசைன் ஸ்கெட்சுகளை மஹிந்திரா நிறுவனம் இன்று வெளியிட்டிருக்கிறது. மஹிந்திராவின் கட்டுறுதியும், மிரட்டலும் கலந்த டிசைன் தாத்பரியங்களை இந்த டிசைன் ஸ்கெட்சுகள் மூலமாக காண முடிகிறது.

 எஞ்சின் விபரம்

எஞ்சின் விபரம்

இந்த புதிய மினி எஸ்யூவியில் எம்ஹாக்80 எஞ்சின் இடம்பெற்றுள்ளதாக மஹிந்திரா தெரிவிக்கிறது. அதேநேரத்தில், எஞ்சின் பற்றிய தொழில்நுட்ப விபரங்கள் வெளியிடப்படவில்லை.

வரிச்சலுகை

வரிச்சலுகை

எம்ஹாக்80 என்று குறிப்பிடப்படுவதால், 80 பிஎச்பி பவர் கொண்ட எஞ்சினுடன் வரும் என்று கருதப்படுகிறது. வரிச்சலுகை பெறும் விதத்தில், குவான்ட்டோவில் இருப்பது போன்றே 1.5 லிட்டர் டீசல் எஞ்சினுடன் வரலாம் என்பது கணிப்பாக உள்ளது.

சென்னையில் தயாரான மாடல்

சென்னையில் தயாரான மாடல்

பிரபல இத்தாலிய டிசைன் நிறுவனமான பினின்ஃபரீனாவின் ஆலோசனைகளின்படி, மும்பையில் உள்ள மஹிந்திரா டிசைன் ஸ்டூடியோவில் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. பின்னர், சென்னையில் உள்ள மஹிந்திராவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில்தான் இந்த புதிய மினி எஸ்யூவி உருவாக்கப்பட்டிருக்கிறது. மஹாராஷ்டிர மாநிலம், சகனில் உள்ள ஆலையில் உற்பத்தி செய்யப்படும்.

7 சீட்டர்?

7 சீட்டர்?

குவான்ட்டோ போன்றே இந்த புதிய மினி எஸ்யூவியும் 7 பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கை வசதியை கொண்டிருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, இந்த எஸ்யூவி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

 மிரட்டல்...

மிரட்டல்...

குவான்டோவைவிட இது மிகவும் கம்பீரமாகவும், மிரட்டலான டிசைன் தாத்பரியங்களை கொண்டிருக்கிறது. எனவே, இது நல்ல வரவேற்பை பெறும் வாய்ப்பு இருக்கிறது.

மினி பொலிரோ

மினி பொலிரோ

இதுவரை U301 என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. மேலும், ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களால் மினி பொலிரோ என்று இந்த எஸ்யூவி அழைக்கப்பட்டு வந்தது.

ஈக்கோஸ்போர்ட்டுக்கு போட்டி

ஈக்கோஸ்போர்ட்டுக்கு போட்டி

இந்த புதிய மினி எஸ்யூவி மாடல் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டுக்கு நேர் போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Mahindra has revealed new mini SUV details today.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X