விரைவில்... மஹிந்திரா ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக் மாடல்!

By Saravana

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புதிய தலைமுறை மஹிந்திரா ஸ்கார்ப்பியோ மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் பல்வேறு டிசைன் மாற்றங்களுடன் இந்த புதிய எஸ்யூவி வகை கார் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த புதிய மாடலுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இந்த நிலையில், புதிய ஸ்கார்ப்பியோ மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. சில மாதங்களில் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுகம் செய்யப்படும் என்று வாடிக்கையாளர்களை மஹிந்திரா சமாதானம் கூறியது. இந்த நிலையில், புதிய ஸ்கார்ப்பியோவின் ஆட்டோமேட்டிக் மாடலை விரைவில் விற்பனைக்கு கொண்டு வருகிறது மஹிந்திரா. அதன் சிறப்பம்சங்களை ஸ்லைடரில் காணலாம்.

வேரியண்ட்டுகள்

வேரியண்ட்டுகள்

புதிய ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக் மாடல் மூன்று டாப் வேரியண்ட்டுகளில் மட்டும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

மாடல்கள்

மாடல்கள்

2 வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் என இரண்டிலும் புதிய ஸ்கார்ப்பியோவின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் கிடைக்கும்

கியர்பாக்ஸ்

கியர்பாக்ஸ்

புதிய ஸ்கார்ப்பியோவில் செல்ஃப் ஷிஃப்ட் ஹைட்ராலிக் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

மாற்றங்கள்

மாற்றங்கள்

டிசைனில் ஆட்டோமேட்டிக் மாடலில் எவ்வித மாறுதல்களும் இருக்காது. பின்புற டெயில்கேட்டில் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை காட்டும் பேட்ஜ் கொடுக்கப்பட்டிருக்கும்.

கூடுதல் விலை

கூடுதல் விலை

மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களைவிட ஒரு லட்ச ரூபாய் கூடுதல் விலையில் புதிய ஸ்கார்ப்பியோ விற்பனைக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Mahindra will be offering its automatic transmission in its top three variants of Scorpio. It will also be offered with both two-wheel drive as well as four-wheel drive automatic option.
Story first published: Friday, July 3, 2015, 10:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X