புதுப்பொலிவுடன் வரும் மஹிந்திரா தார் எஸ்யூவி!

By Saravana

எஸ்யூவி ஸ்பெஷலிஸ்ட் மஹிந்திரா தனது தயாரிப்புகளுக்கு புதுப்பொலிவு கொடுக்கும் பணிகளில் தீவிரமாக மூழ்கியிருக்கிறது. அந்த வரிசையில், ஆஃப் ரோடு பிரியர்களின் ஆஸ்தான மாடலாக விளங்கும் தார் எஸ்யூவிக்கு புதுப்பொலிவு கொடுத்து இந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வருவதற்கு அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் சிறிய மாற்றங்களை செய்து தார் எஸ்யூவியை விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. மேலும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்கு தக்கவாறு சிறிது நவீன தோற்றம் மற்றும் வசதிகளுடன் மேம்படுத்தவும் திட்டமிட்டு இருக்கிறது.

CS Santosh

வெளிப்புறத்தில் பெரிய வீல் ஆர்ச், மேம்படுத்தப்பட்ட ஹெட்லைட், டெயில் லைட், புதிய வண்ணங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இன்டிரியரை பொறுத்தவரை புதிய டேஷ்போர்டு அமைப்பு, மேம்படுத்தப்பட்ட குளிர்சாதன வசதி, பொழுதுபோக்கு சாதனங்கள், 4 வீல் டிரைவ் சிஸ்டம், கியர் லிவிர் மற்றும் ஹேண்ட்பிரேக் லிவர்கள் புதிய டிசைனில் வர இருக்கிறது.

மஹிந்திரா தார் எஸ்யூவி தற்போது 63 பிஎச்பி பவரையும்,, 182.5 என்எம் டார்க்கையும் வழங்கும் 2,523 சிசி டீசல் எஞ்சின் மற்றும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கிறது. பயன்பாட்டை பொறுத்து ரியர் வீல் டிரைவ் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம்களில் தேர்வு செய்து கொள்ளலாம்.

மேலும், 105 பிஎச்பி பவரையும், 247 என்எம் டார்க்கையும் அளிக்கும் 2,498 சிசி டீசல் எஞ்சின் கொண்டதாகவும், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாகவும் கிடைக்கிறது. இது ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டது.

Most Read Articles
English summary
India's largest manufacturer and seller of utility vehicles, Mahindra has a wide range of products on offer. They plan to introduce more modern and appealing products for 2015 for the younger generation. It also plans to introduce minor changes and upgrades to its current portfolio.
Story first published: Wednesday, January 21, 2015, 10:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X