2014ம் ஆண்டில் உலகின் டாப்- 10 சிறிய கார்கள்: முதலிடத்தில் மாருதி ஆல்ட்டோ!

By Saravana

சிறிய கார் ரகத்தில், உலகின் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை இந்தியாவின் மாருதி ஆல்ட்டோ கார் பெற்றிருக்கிறது. ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப், டைஹட்சூ டேன்ட்டோ, டொயோட்டா அக்வா மற்றும் ஹோண்டா ஃபிட் கார்களை பின்னுக்குத் தள்ளி ஆல்ட்டோ விற்பனையில் உலக அளவில் முதலிடத்தை பெற்றிருக்கிறது.

கடந்த 9 ஆண்டுகளாக இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் கார் மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கும் ஆல்ட்டோ தற்போது உலக அரங்கில் தனது விற்பனை பலத்தை காட்டியிருக்கிறது. கடந்த ஆண்டு விற்பனையில் உலகின் டாப் - 10 சிறிய ரக கார் மாடல்களின் பட்டியலை ஸ்லைடரில் காணலாம்.


டாப் 10 கார் பட்டியல்

டாப் 10 கார் பட்டியல்

குறிப்பிட்ட ஒரு நாட்டில் விற்பனையான எண்ணிக்கையின் அடிப்படையில் இந்த டாப் - 10 கார்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

10.சுஸுகி வேகன் ஆர்

10.சுஸுகி வேகன் ஆர்

டாப் - 10 பட்டியலில் 10வது இடத்தில் சுஸுகி வேகன் ஆர் கார் உள்ளது. கடந்த ஆண்டு ஜப்பானில் 1,75,369 சுஸுகி வேகன் ஆர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2013ம் ஆண்டில் 1,86,175 கார்கள் விற்பனையான நிலையில், கடந்த ஆண்டு விற்பனையில் 5.80 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது.

9. ஹோண்டா என்- பாக்ஸ்

9. ஹோண்டா என்- பாக்ஸ்

உலகின் அதிகம் விற்பனையாகும் சிறிய கார்களின் பட்டியலில் 9வது இடத்தில் ஹோண்டா என் - பாக்ஸ் பெற்றிருக்கிறது. கடந்த ஆண்டு ஜப்பானில் 2,34,995 என் - பாக்ஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2013ம் ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு விற்பனை 23.43 சதவீதம் குறைந்திருக்கிறது.

8. ஃபோக்ஸ்வேகன் கோல்

8. ஃபோக்ஸ்வேகன் கோல்

பிரேசில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஃபோக்ஸ்வேகனின் சிறிய கார் மாடலான கோல் கடந்த ஆண்டு 8வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டில் 1,83,366 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், அதற்கு முந்தைய ஆண்டு 2,55,057 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

7. ஃபியட் பாலியோ

7. ஃபியட் பாலியோ

பிரேசில் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஃபியட் பாலியோ கார் மாடல் 7வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டு 1,83,366 ஃபியட் பாலியோ கார்கள் பிரேசிலில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதற்கு முந்தைய ஆண்டு 1,77,014 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த ஆண்டு விற்பனை 3.80 சதவீதம் அதிகரித்துள்ளது.

 6.மாருதி ஸ்விஃப்ட்

6.மாருதி ஸ்விஃப்ட்

கடந்த ஆண்டு விற்பனையில் 6வது அதிகம் விற்பனையான சிறிய கார் மாடல் என்ற பெருமையை மாருதி ஸ்விஃப்ட் பெற்றிருக்கிறது. கடந்த 2013ம் ஆண்டில் இந்தியாவில் 1,99,347 கார்கள் விற்பனையான நிலையில், கடந்த ஆண்டு 2,02,831 கார்கள் விற்பனை செய்யப்பட்டு 1.75 சதவீதம் வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

 5. ஹோண்டா ஃபிட்

5. ஹோண்டா ஃபிட்

நம் நாட்டில் ஹோண்டா ஜாஸ் என்ற பிராண்டில் விற்பனை செய்யப்பட்ட மாடல்தான் ஜப்பானில் ஹோண்டா ஃபிட் என்ற பெயரில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு 2,02,838 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2013ம் ஆண்டைவிட 11.81 சதவீதம் கூடுதல் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

4. டொயோட்டா அக்வா

4. டொயோட்டா அக்வா

ஜப்பானில் விற்பனை செய்யப்படும் டொயோட்டா அக்வா கார் 4வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டு 2,33,209 அக்வா கார்களை ஜப்பானில் விற்பனை செய்துள்ளது டொயோட்டா கார் நிறுவனம். 2013ம் ஆண்டு விற்பனையுடன் ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு விற்பனை 11.11 சதவீதம் குறைந்துவிட்டது.

 3. டைஹட்சூ டேன்ட்டோ

3. டைஹட்சூ டேன்ட்டோ

ஜப்பானில் விற்பனையாகும் டைஹட்சூ டேன்ட்டோ கார் மாடல் 3வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு 2,34,453 டைஹட்சூ டேன்ட்டோ கார்கள் விற்பனையாகியுள்ளன. கடந்த 2013ம் ஆண்டு 1,44,629 கார்கள் விற்பனையான நிலையில், கடந்த ஆண்டு விற்பனை 62.11 சதவீதம் உயர்ந்துள்ளது. டாப் 10 பட்டியலில் அதிக விற்பனை வளர்ச்சியை பதிவு செய்திருக்கும் மாடலும் இதுதான்.

 2. ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப்

2. ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப்

ஜெர்மனியில் விற்பனையாகும் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் கார் மாடல் 2வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு ஜெர்மனியில் 2,55,044 ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 2013ம் ஆண்டில் 2,44,249 கார்கள் விற்பனையாகியிருந்த நிலையில், கடந்த ஆண்டு ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் கார் 4.42 சதவீத விற்பனை வளர்ச்சியை பதிவு செய்திருக்கிறது.

நம்பர்- 1 மாருதி ஆல்ட்டோ

நம்பர்- 1 மாருதி ஆல்ட்டோ

உலக அளவில் ஒரு நாட்டில் அதிக விற்பனையாகிய சிறிய கார் மாடல் என்ற பெருமையை இந்தியாவின் மாருதி ஆல்ட்டோ கார் பெற்றிருக்கிறது. கடந்த 2013ம் ஆண்டில் 2,65,777 மாருதி ஆல்ட்டோ கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு 2,64,544 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. விற்பனையில், 0.46 சதவீதம் குறைந்திருக்கிறது.

Most Read Articles
English summary
Maruti Suzuki's best-selling car Alto, has again emerged as the largest-selling small car in the world in 2014 beating the likes of Volkswagen Golf in Germany and Daihatsu Tanto, Toyota Aqua and Honda Fit in Japan. 
Story first published: Tuesday, January 13, 2015, 17:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X