மாருதியின் மினி எஸ்யூவியின் வருகை குறித்த தகவல்கள்!

By Saravana

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த சர்வதேச வாகன கண்காட்சியில், சுஸுகி இக்னிஸ் என்ற மினி எஸ்யூவி மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

உலகின் பல்வேறு நாடுகளில் விற்பனைக்கு கொண்டு செல்லப்பட இருக்கும் இந்த புதிய மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்ற மகிழ்ச்சியானத் தகவலோடு, இந்த கார் இந்தியாவில்தான் உற்பத்தி செய்யப்பட இருக்கிறது என்ற செய்தியையும் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் இரட்டிப்பு மகிழ்ச்சி.

கான்செப்ட்

கான்செப்ட்

கடந்த மார்ச் மாதம் ஜெனீவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஐஎம்-4 கான்செப்ட்தான் தற்போது இக்னிஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிலைக்கு மேம்படுத்தப்பட்டு இருக்கிறது.

இலகு கட்டமைப்பு

இலகு கட்டமைப்பு

சமீபத்தில் விற்பனைக்கு வந்த மாருதி பலேனோ காரும், இந்த காரும் சுஸுகி நிறுவனத்தின் புதிய இலகு எடை கட்டமைப்பு முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது. அத்துடன், பலேனோவை தொடர்ந்து மாருதி பியர்களை வசீகரிக்க வரும் புதிய க்ராஸ்ஓவர் மாடலாகவும் குறிப்பிடலாம்.

ரகம்

ரகம்

இந்த புதிய மாடல் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்டது. எனவே, இந்தியாவில் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தில் நிலைநிறுத்தப்படும்.

எஞ்சின்

எஞ்சின்

புதிய மாருதி இக்னிஸ் க்ராஸ்ஓவர் மாடலில் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது. மேலும், ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் மற்றும் 4 வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக விற்பனைக்கு வருகிறது.

அறிமுகம்

அறிமுகம்

வரும் பிப்ரவரி மாதம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் இந்த புதிய மினி எஸ்யூவி வகை மாடல், மாருதி பிராண்டில் முதல்முறையாக காட்சிப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாருதி பலேனோ கார் போன்றே முதலில் இந்தியாவில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்.

ஏற்றுமதி

ஏற்றுமதி

இந்தியாவை முக்கிய உற்பத்தி கேந்திரமாக பயன்படுத்த மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி, இந்த புதிய காம்பேக்ட் க்ராஸ்ஓவர் மாடலையும் இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்வதோடு, ஐரோப்பா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யவும் அந்த நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.


Most Read Articles
 
English summary
The Ignis compact crossover was showcased at 2015 Tokyo Motor Show. Maruti Suzuki will showcase this model at 2016 Auto Expo in Delhi. They also plan on exporting the Ignis to several other markets and on the top-of-the-list is Germany.
Please Wait while comments are loading...
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X