மாருதி கார் விலை உயர்ந்தது... விலை உயர்வு விபரம்!

By Saravana

அனைத்து கார்களின் விலையையும் 2 முதல் 4 சதவீதம் வரை உயர்த்தியிருக்கிறது மாருதி கார் நிறுவனம்.

கடந்த மாதமே இந்த விலை உயர்வை அறிவித்துவிட்ட அந்த நிறுவனம், தற்போது வரிச்சலுகை ரத்து மற்றும் உற்பத்தி செலவீனத்தை கருதி விலையை உயர்த்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

Maruti Wagon R

பிற கார் நிறுவனங்களைவிட குறைவான சதவீதமே கார் விலையை உயர்த்தியிருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விலை உயர்வு அறிவிப்பு காரணமாக மாருதி ஆல்ட்டோ 800 காரின் விலை ரூ..9,744 வரையிலும், வேகன் ஆர் காரின் விலை ரூ.12,538 வரையிலும் அதிகரித்துள்ளது.

மாருதி ஸ்விஃப்ட் காரின் விலை ரூ.15,883 வரையிலும், டிசையர் காரின் விலை ரூ.17,509 வரையிலும் அதிகரித்துள்ளது. மாருதி எர்டிகா காரின் விலை ரூ.18,768 வரையிலும், மாருதி ஓம்னி விலை ரூ.8,723 வரையிலும் அதிகரித்துள்ளது.

ஜனவரி 1 முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு கொண்டு வரப்பட்டதால், அன்றிலிருந்து முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki India, the country's largest car maker, will hike the car prices in the range of 2-4 per cent following the government's decision to halt tax breaks to automakers beyond Dec. 31. 
Story first published: Thursday, January 8, 2015, 15:23 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X