விரைவில் வரும் மாருதி எஸ் கிராஸ் பற்றிய தெரியாத உண்மைகள்!!

By Saravana

அடுத்த மாதம் காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் புதிய எஸ் கிராஸ் மாடலுடன் களமிறங்க இருக்கிறது மாருதி.

இந்த நிலையில், மாருதி பிராண்டிலிருந்து வரும் புதிய ரக கார் என்பதால் இந்த கார் மீது வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்த நிலையில், இந்த காரை பற்றிய சில முக்கிய விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

01. மாருதி பெயர் இருக்காது...

01. மாருதி பெயர் இருக்காது...

இந்த புதிய காரில் மாருதி அல்லது சுஸுகியின் பெயர் எந்த இடத்திலும் இடம்பெற்றிருக்காது. வெறும் காரின் பெயர் மட்டுமே இடம்பெற்றிருக்கும்.

02. புதிய பெயர்

02. புதிய பெயர்

மாருதி எஸ் கிராஸ் கார் இந்தியாவில் ஏ கிராஸ் என்ற பெயரில் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

03. இன்டிரியர்

03. இன்டிரியர்

மாருதி ஸ்விஃப்ட் காரின் இன்டிரியர் அமைப்புதான் இந்த புதிய ஏ கிராஸ் காரிலும் இடம்பெற்றிருக்கும்.

04. எஞ்சின் ஆப்ஷன்

04. எஞ்சின் ஆப்ஷன்

இந்தியாவில் 1.3 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் வர இருக்கிறது. இதில், 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் 91 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாகவும், 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரை அளிக்க வல்லதாக இருக்கும். 1.3 லிட்டர் மாடலில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸும், 1.6 லிட்டர் டீசல் மாடலில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். மாருதி எஸ் க்ராஸ் காருக்கான எஞ்சின்களை ஃபியட் நிறுவனத்திடமிருந்து பெற இருக்கிறது மாருதி.

05. ஆல் வீல் டிரைவ்

05. ஆல் வீல் டிரைவ்

மாருதி எஸ் கிராஸ் கார் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷனிலும் அறிமுகம் செய்ய மாருதி திட்டமிட்டு இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் இருந்தாலும், சாதாரண சாலைகளுக்கு ஏற்றதாகவே இருக்கும். ஆஃபரோடு எனப்படும் கரடு முரடான சாலைகளில் பயன்படுத்துவதற்கு ஏற்ற முழுமையான மாடலாக இருக்காது.

06. வடிவம்

06. வடிவம்

மாருதி எஸ் கிராஸ் 4,300மிமீ நீளமும், 1,765மிமீ அகலமும், 1,580மிமீ உயரமும் கொண்டதாக இருக்கும். வெளிநாடுகளில் 170மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்ட எஸ் கிராஸ் இந்தியாவில் இதைவிட அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும்.

07. வசதிகள்

07. வசதிகள்

ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், பின்புற இருக்கைக்கான தனி ஏசி வென்ட்டுகள், ஸ்மார்ட்ப்ளே டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் புஷ் ஸ்டார்ட் ஆகியவை முக்கிய வசதிகளாக இருக்கும்.

08. புரொஜெக்டர் ஹெட்லைட்

08. புரொஜெக்டர் ஹெட்லைட்

பகல்நேர விளக்குகள் கொண்ட புரொஜெக்டர் ஹெட்லைட், 16 இன்ச் அலாய் வீல்கள், க்ரோம் க்ரில் அமைப்பு ஆகியவை முக்கிய வெளிப்புற அம்சங்களாக இருக்கும்.

09. பூட் ஸ்பேஸ்

09. பூட் ஸ்பேஸ்

இந்த க்ராஸ்ஓவர் மாடலில் 430 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், பின்புற இருக்கையை 60:40 என்ற விகிதத்தில் மடக்கிக் கொண்டால், பொருட்கள் வைப்பதற்கான இடவசதியை மேலும் அதிகரிக்கலாம்.

10. எதிர்பார்க்கும் விலை

10. எதிர்பார்க்கும் விலை

மாருதி எஸ் கிராஸ் கார் ரூ.8.5 லட்சம் முதல் ரூ.13 லட்சம் விலையில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கார் மாருதியின் பிரிமியம் ஷோரூம்கள் வழியாக விற்பனை செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Most Read Articles
English summary
Here's a list of 10 things that you should know about the S-Cross.
Story first published: Saturday, June 13, 2015, 12:28 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X