கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் மாருதி ஸ்விஃப்ட், டிசையர் கார்கள்!

By Ravichandran

செலிரியோ காரைத் தொடர்ந்து மாருதி ஸ்விப்ட் மற்றும் டிசையர் கார்களில் ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகியவை ஆப்ஷனலாக சேர்க்கப்பட்டிருக்கின்றன.

முன்னதாக, மாருதி நிறுவன தயாரிப்புகளில், ஏர்பேகுகள் மற்றும் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் டாப் வேரியண்ட்டுகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், ஃபோர்டு, டொயோட்டா, ஃபோக்ஸ்வேகன் உள்ளிட்ட நிறுவனங்கள், ஏர்பேக்குகள் போன்ற அம்சங்களை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக வழங்கி வருகின்றனர். இதனால் ஏற்பட்டிருக்கும் நெருக்கடி மற்றும் சந்தை போட்டி உள்ளிட்ட காரணங்களால், மாருதி நிறுவனமும் ஏர்பேக்குகள் போன்ற அம்சங்களை பேஸ் மாடல் உள்பட அனைத்து வேரியண்ட்டுகளிலும் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்து கொள்ளும் வகையில், பாதுகாப்பு அம்சங்களாக வழங்க துவங்கியுள்ளனர்.

கடந்த ஆண்டு நடத்தபட்ட கிராஷ் டெஸ்ட்டுகளில், மாருதி சுஸுகி ஸ்விப்ட் கார் மிக மோசமாக தோல்வி அடைந்ததால், செய்திகளில் பரபரப்பாக பேசபட்டது. இந்த கிராஷ் டெஸ்ட், குளோபல் என்சிஏபி அமைப்பின் மூலம் நடத்தபட்டது.

இந்த கிராஷ் டெஸ்டில், பெரியவர்களின் பாதுகாப்பு அம்சம் தொடர்பான விஷயத்தில் மாருதி ஸ்விஃப்ட் கார் பூஜ்ஜியம் புள்ளிகளையே பெற்றது. குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில், 1 புள்ளியை மற்றுமே பெற்றது. மாருதி நிறுவனத்தின் மீதான பிராண்டு மதிப்பில், இது ஒரு யோசிக்க வேண்டிய விஷயமாக இருந்தது.

Maruti Suzuki Swift and Dzire are Offered With Standard Safety Features Now

இதற்கிடையில், ஸ்விப்ட் கார் இந்திய கிராஷ் டெஸ்ட் மதிப்பீடுகளில் தேறியுள்ளதாக மாருதி சுஸுகி தெரிவித்தது. இந்த சோதனைகள், மணிக்கு 64 கிலோமீட்டர் என்ற உயரிய வேகத்தில் நடத்தபட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தற்போது, தங்களின் ஸ்விப்ட் ஹேட்ச்பேக் கார் மற்றும் டிசையர் காம்பேக்ட் செடான் கார்களில் அனைத்து வேரியண்ட்களிலும், ஏர்பேக்குகள் மற்றும் ஏபிஎஸ் எனப்படும் ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை ஸ்டாண்டர்ட் பாதுகாப்பு அம்சங்களாக வழங்கபடுகிறது என்பது வரவேற்க வேண்டிய விஷயமாகும்.

Most Read Articles
English summary
Maruti Suzuki Swift and Dzire are Now Offered With Standard Safety Features. Earlier, safety features like airbags and Anti-lock Braking System (ABS) were available as optional features. Now, Swift hatchback and Swift Dzire compact sedan are available with airbags and Anti-lock Braking System (ABS) across all the variants.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X