விற்பனையில் மாருதி டிசையரின் 'மில்லியன்' சாதனை!

By Saravana

விற்பனையில் ஒரு மில்லியனை தொட்டு மாருதி டிசையர் கார் புதிய சாதனை படைத்துள்ளது. மேலும், ஒரு மில்லியன் விற்பனையை தொட்ட இந்தியாவின் முதல் செடான் கார் என்ற பெருமையையும் மாருதி டிசையர் பெற்றிருக்கிறது.

மேலும், காம்பேக்ட் செடான் அவதாரம் எடுத்தது முதல் இதுவரை காம்பேக்ட் செடான் மார்க்கெட்டில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. மாருதி டிசையர் கார் விற்பனையில் இந்தளவு வாடிக்கையாளர்களை கட்டிப் போட்டு வைத்திருப்பதற்கான காரணங்களையும் மற்றும் மாருதி டிசையர் வாடிக்கையாளர்களுக்கு ஒரு இனிப்பான தகவலையும் பகிர்ந்து கொள்கிறோம்.

டிசையர் பற்றி...

டிசையர் பற்றி...

கடந்த 2008ம் ஆண்டு மார்ச் மாதம் மாருதி டிசையர் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரின் அடிப்படையிலான செடான் மாடலாக வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும், மாருதி எஸ்டீம் காருக்கு மாற்றாக நிலைநிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து, கடந்த 2012ம் ஆண்டு மாருதி டிசையர் கார் 4 மீட்டருக்கும் குறைவான நீளம் கொண்ட நாட்ச்பேக் கார் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டது. அதுமுதல், விற்பனை அசுர வேகத்தில் உயரத் தொடங்கியது.

மில்லியன் சாதனை

மில்லியன் சாதனை

மாருதி ஆல்ட்டோ, ஓம்னி, வேகன் ஆர் மற்றும் ஸ்விஃப்ட் கார்களை தொடர்ந்து விற்பனையில் ஒரு மில்லியன் சாதனையை டிசையர் கார் பெற்றிருக்கிறது.

கனவை நனவாக்கும் மாடல்...

கனவை நனவாக்கும் மாடல்...

நடுத்தர வர்க்கத்தினரின் செடான் கார் கனவை கச்சிதமாக பூர்த்தி செய்யும் மாடல். விலை, டிசைன், வசதிகள், பராமரிப்பு செலவு போன்றவை இந்த காருக்கான வரவேற்பை உச்சத்தில் வைத்திருக்கிறது. ஆம், கடந்த மாத விற்பனையில் நாட்டின் அதிகம் விற்பனையான கார் மாடல் டிசையர்தான் என்பதை குறிப்பிட வேண்டும். விற்பனையில் சிறிய கார்களுக்கே சவால் விட்டு வரும் இந்த காரின் சிறப்பம்சங்களை தொடர்ந்து காணலாம்.

 டிசைன்

டிசைன்

போட்டியாளர்களை எதிர்கொள்ளும் விதத்தில் சில மாதங்களுக்கு முன் புதுப்பொலிவு கொடுக்கப்பட்ட டிசையர் மாடலை மாருதி அறிமுகப்படுத்தியது. புதிய க்ரோம் க்ரில் அமைப்பு, கருப்பு நிற பின்புலம் கொண்ட ஸ்மோக்டு ஹெட்லைட் ஆகியவை முகப்பு தோற்றத்தை வலிமையாக்கும் விஷயங்கள். பக்கவாட்டிலும், பின்புறத்திலும் மாற்றங்கள் அதிகமில்லை. பக்கவாட்டில் புதிய அலாய் வீல்களும், பின்புறத்தில் பம்பர் டிசைனும் புதிது. ஒட்டுமொதத்தமாக பார்க்கும்போது மிடுக்கான முகப்புதான் இந்த காரின் டிசைனுக்கு ப்ளஸ் பாயிண்ட்.

 இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியர் பீஜ் மற்றும் கருப்பு நிற இன்டிரியர் கவர்வதாக இருக்கிறது. பாகங்களின் தரமும் தக்க வைக்கப்பட்டுள்ளது. ஹெட்ரெஸ்ட், பின்புற இருக்கை பயணிகளுக்கான ஆர்ம் ரெஸ்ட் போன்ற வசதிகளை தொடர்ந்து பெற்றிருக்கிறது. அலங்கார மரத்தகடுகளும் பிரிமியமான உணர்வை தருகிறது.

 முக்கிய வசதிகள்

முக்கிய வசதிகள்

புஷ் பட்டன் ஸ்டார்ட், ஸ்டீயரிங் வீலில் கன்ட்ரோல் சுவிட்சுகள், புளூடூத் மியூசிக் சிஸ்டம், ரிமோட் கீலெஸ் என்ட்ரி, மேப் லைட்டுகள், சார்ஜிங் பாயிண்ட் போன்ற வசதிகள் உள்ளன.

எஞ்சின்

எஞ்சின்

பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும். டீசல் மாடலில் இருக்கும் 1.3 லிட்டர் எஞ்சின் 74 பிஎச்பி பவரையும், 190 என்எம் டார்க்கையும் வழங்கும். டீசல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும்.

மைலேஜ்

மைலேஜ்

  • பெட்ரோல் மேனுவல்: 20.85 கிமீ/லி
  • பெட்ரோல் ஆட்டோமேட்டிக்: 18.5 கிமீ/லி
  • டீசல்: 26.59 கிமீ/லி
  • போட்டியாளர்கள் எளிதாக நெருங்க முடியாத அளவிற்கான அதிக எரிபொருள் சிக்கனம் கொண்ட மாடலாக டிசையர் ஃபேஸ்லிஃப்ட் மாடல் வந்திருக்கிறது.

    பிரேக் சிஸ்டம்

    பிரேக் சிஸ்டம்

    முன்புறத்தில் வென்டிலேட்டட் டிஸ்க் பிரேக்குகளும், பின்புறத்தில் டிரம் பிரேக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இவை சிறப்பான செயல்திறன் கொண்டதாக இருக்கின்றன.

    சஸ்பென்ஷன்

    சஸ்பென்ஷன்

    முன்புறத்தில் மெக்ஃபர்ஷன் ஸ்ட்ரட் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் டார்சன் பீம் சஸ்பென்ஷன் அமைப்பும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வேகத்தடைகள் மற்றும் நெடுஞ்சாலையில் சிறப்பான கையாளுமையை வழங்குகிறது.

     அலாய் வீல்கள்

    அலாய் வீல்கள்

    பேஸ் மற்றும் மிட் வேரியண்ட்டுகளில் 14 இஞ்ச் வீல்களும், டாப் வேரியண்ட்டில் 15 இஞ்ச் அலாய் வீல்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

    எரிபொருள் டேங்க் கொள்ளளவு

    எரிபொருள் டேங்க் கொள்ளளவு

    இந்த காரில் 42 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் தொட்டி இருக்கிறது. இது நீண்ட தூர பயணங்களுக்கு ஏதுவாக இருக்கும்.

    பாதுகாப்பு வசதிகள்

    பாதுகாப்பு வசதிகள்

    டாப் வேரியணட்டில் மட்டும் ஏர்பேக்குககள் கொடுக்கப்படுகின்றன. தவிர்த்து, ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் டோர் லாக் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் போன்ற பல பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

    வண்ணங்கள்

    வண்ணங்கள்

    வெள்ளை, சில்வர், கருப்பு, நீலம் தவிர்த்து, புதிதாக பழுப்பு, அரக்கு மற்றும் புதிய ஆல்ப் ப்ளூ ஆகிய வண்ணங்களில் வந்துள்ளது. சிவப்பு நிறம் நீக்கப்பட்டுவிட்டது.

    உதிரிபாகங்கள் விலை

    உதிரிபாகங்கள் விலை

    இதன் போட்டியாளர்களை ஒப்பிட்டு பார்க்க போனால், உதிரிபாகங்கள் விலை மிக குறைவு என்பதுடன், பராமரிப்பு செலவீனம் போன்றவை நடுத்தர வர்க்கத்தினருக்கு ஏற்ற செடான் மாடல் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

    சர்வீஸ் நெட்வொர்க்

    சர்வீஸ் நெட்வொர்க்

    காரில் பிரச்னை என்றால் எந்தவொரு இடத்தில் இருந்தும் மிக விரைவான உதவியை அங்கீகரிக்கப்பட்ட டீலர்களிடமிருந்து பெற முடியும். அந்தளவுக்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மிக நெருக்கமான சர்வீஸ் கட்டமைப்பை பெற்றிருக்கிறது.

     டிசையர் உரிமையாளர்களின் கவனத்திற்கு...

    டிசையர் உரிமையாளர்களின் கவனத்திற்கு...

    டிசையர் காரின் மில்லியன் விற்பனை சாதனையை கொண்டாடும் விதத்தில், மாருதி நிறுவனத்திடமிருந்து இனிப்பான செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, நீங்கள் டிசையர் உரிமையாளராக இருந்தால், கீழே உள்ள இணைய இணைப்பை சொடுக்கி உங்களது விபரங்களை பதிவு செய்யுங்கள். உங்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The Maruti Suzuki Swift Dzire has crossed the 1 million sales mark, making it the only sedan to do so in India. The Dzire has also been the best selling compact sedan in India for the last three years.
Story first published: Thursday, July 30, 2015, 12:14 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X