லிட்டருக்கு 48.2 கிமீ மைலேஜ் தரும் ஸ்விஃப்ட்: 2017ல் இந்தியாவில் ரிலீஸ்!

By Saravana

கடந்த வாரம் டெல்லியில் நடந்த பசுமை போக்குவரத்துக்கான சர்வதேச கண்காட்சியில், ஸ்விஃப்ட் காரின் ஹைபிரிட் கான்செப்ட் மாடலை மாருதி நிறுவனம் காட்சிக்கு வைத்திருந்தது. கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த ஆட்டோ எக்ஸ்போவிலும் இந்த கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

இந்த ஸ்விஃப்ட் ஹைபிரிட் மாடலை மாருதி நிறுவனம் மீண்டும் இந்த கண்காட்சியில் காட்சிக்கு வைத்திருந்தது ஆட்டோமொபைல் துறையினரையும், வாடிக்கையாளர்களையும் உற்று நோக்க வைத்திருக்கிறது. ஸ்விஃப்ட் ரேஞ்ச் எக்ஸ்டென்டர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த காரை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர மாருதி திட்டமிட்டிருப்பதே இந்த காரை மீண்டும், மீண்டும் காட்சிக்கு வைப்பதன் அர்த்தமாக கற்பிக்கப்படுகிறது.

கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

பெட்ரோல் எஞ்சின் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்கள் இணைந்து செயல்புரியும் ஹைபிரிட் கார் கான்செப்ட் மாடல் இது. இந்த காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 658சிசி பெட்ரோல் எஞ்சின் மற்றும் 74 எச்பி ஆற்றலை அளிக்கும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கிறது. சிங்கிள் ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டது.

மைலேஜ்

மைலேஜ்

கணக்கீடுகளின்படி, லிட்டருக்கு 48.2 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. பேட்டரியில் இருக்கும் சார்ஜ் மூலமாக மட்டும் 25.5 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

பேட்டரி

பேட்டரி

இந்த காரில் 5 kWh திறன் கொண்ட லித்தியம் அயான் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கிறது. ஒன்றரை மணிநேரத்தில் முழு சார்ஜ் ஆகிவிடும் என்பது இதன் சிறப்பு.

கூடுதல் எடை

கூடுதல் எடை

சாதாரண ஸ்விஃப்ட் காரைவிட இந்த ஹைபிரிட் ஸ்விஃப்ட் கார் 130 கிலோ கூடுதல் எடைகொண்டது. மொத்தமாக 1,020 கிலோ எடை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விற்பனை

விற்பனை

வரும் 2017ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய தலைமுறை ஸ்விஃப்ட் காரில் இந்த ஹைபிரிட் மாடலையும் சேர்க்க மாருதி திட்டமிட்டுள்ளதாம்.

Most Read Articles
English summary
Maruti Suzuki Swift Range Extender is the name of the plug-in hybrid version of the popular hatchback. The Swift Range Extender was showcased at the 2015 International Green Mobility Expo in New Delhi. 
Story first published: Tuesday, March 3, 2015, 13:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X