ஃபெராரி குதிரை சவாரி ஆகாது... இந்தியாவில் தனித்து களமிறங்கும் மஸராட்டி!

By Saravana

இந்தியாவில், மீண்டும் கார் விற்பனையை துவங்குவதற்கு மஸராட்டி கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விரைவில் தனது கார் மாடல்களை அந்த நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்த உள்ளது.

முன்னர் ஃபெராரி கார் ஷோரூம்கள் வழியாகவே மஸராட்டி கார்களும் விற்பனை செய்யப்பட்டன. ஆனால், இந்தமுறை தனித்து இந்தியாவில் கார் வர்த்தகத்தை நடத்துவதற்கு மஸராட்டி முடிவு செய்துள்ளது.

Maserati Car

முதலாவதாக, குவாட்ரோபோர்ட்டே மற்றும் கிராண் டூரிஷ்மோ மாடல்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். பின்னர், இதர மாடல்களையும் அறிமுகம் செய்யப்படும்.

இதுதவிர்த்து, அடுத்த ஆண்டு டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் புதிய எஸ்யூவியையும் மஸராட்டி காட்சிக்கு வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதான் அந்த நிறுவனத்தின் முதல் எஸ்யூவி மாடலாக இருக்கும்.

இதனால், மஸராட்டி பிராண்டின் நகர்வுகளை இந்திய கோடீஸ்வர வாடிக்கையாளர்கள் ஆவலுடன் கண்காணித்து வருகின்றனர்.

Most Read Articles
English summary
Now Maserati is contemplating on making a comeback to Indian market. This time, however, they are planning to enter the country as a an independent manufacturer.
Story first published: Tuesday, June 16, 2015, 9:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X