ஜெனீவாவில் ரிலீசாகும் புதிய மெக்லாரன் 675எல்டி ஸ்போர்ட்ஸ் கார்!

By Saravana

அடுத்த வாரம் துவங்க இருக்கும் ஜெனீவாம மோட்டார் ஷோவில் புதிய மெக்லாரன் ஸ்போர்ட்ஸ் கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மெக்லாரன் 675LT என்று அழைக்கப்படும் இந்த புதிய கார் ரேஸ் டிராக்கில் ஓட்டுவதற்கான கூடுதல் அம்சங்கள் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், சாதாரண சாலைகளிலும் இயக்க முடியும் என்பதுதான் இதன் ஸ்பெஷல். பெர்ஃபார்மென்ஸ் விரும்பிகளுக்கான இந்த கார் மாடலில் இருக்கும் பிரத்யேக அம்சங்கள் குறித்த ஸ்லைடரில் காணலாம்.


ஏசி இருக்காது

ஏசி இருக்காது

ரேஸ் டிராக்கிற்காக வடிவமைக்கப்படும் இதுபோன்ற ஸ்பெஷல் எடிசன் மாடல்களில் பல்வேறு முக்கிய வசதிகள் எடை குறைப்பு மற்றும் எஞ்சின் பெர்ஃபார்மென்ஸுக்காக பிடுங்கப்படுவது வழக்கம். சில கார்களில் காரின் கதவு கைப்பிடிகள் கூட பிடுங்கப்பட்டுவிடும். அந்த வகையில், இந்த காரில் ஏசி வசதி இல்லை. ஆனால், வாடிக்கையாளர்கள் விரும்பினால் கூடுதல் தொகை கொடுத்து ஏசி., வசதி செய்து கொள்ளலாம்.

முகப்பு

முகப்பு

வழக்கமான மெக்லாரன் கார்களை போன்ற ஹெட்லைட் ஹவுசிங் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகளை பெற்றிருக்கிறது. ஏர் டிஃபியூசர் பம்பருடன் இயைந்து நிற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல மாதங்கள் விண்ட் ட்யூனல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு ஓர் சிறப்பான ஏரோடைனமிக்ஸ் கொண்ட காராக இதனை வெளியிடுவதாக மெக்லாரன் தெரிவித்துள்ளது.

பக்கவாட்டு தோற்றம்

பக்கவாட்டு தோற்றம்

இந்த காரின் பெயரில் இருக்கும் LT என்பது Long Tail என்பதை குறிக்கிறது. இதுவரை வெளிவந்த மெக்லாரன் கார்களிலேயே இதுதான் கூடுதல் வால்பகுதி கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. கதவுக்கு பக்கத்தில் எஞ்சினை குளிர்விக்க பெரிய ஏர்டேம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காரின் 5 ஸ்போக் அலாய் வீல் காரின் தோற்ற பொலிவிற்கு வலு சேர்க்கிறது.

பின்புற தோற்றம்

பின்புற தோற்றம்

வால்பகுதியுடன் இணைந்து ரியர் விங், டியூவல் எக்ஸ்சாஸ்ட் பைப்புகள் மற்றும் எல்இடி இண்டிகேட்டர்கள் ஆகியவை காரின் பின்புறத்தை மிக ஸ்போர்ட்டியாக காட்டுகிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த பெர்ஃபார்மென்ஸ் காரில் 666 எச்பி பவரையும், 700 என்எம் டார்க்கையும் வழங்கும் 3.8 லிட்டர் வி8 எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 7 ஸ்பீடு எஸ்எஸ்ஜி டிரான்ஸ்மிஷன் வழியாக ஆற்றலை சக்கரங்களுக்கு கடத்தும். மணிக்கு 330 கிமீ வேகம் வரை செல்லக்கூடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 2.9 வினாடிகளில் தொட்டுவிடுமாம்.

இன்டிரியர்

இன்டிரியர்

இன்டிரியர் அமைப்பு மிக எளிமையாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கருப்பு, சிவப்பு கார்பன் ஃபைபர் அலங்காரம் வசீகரிக்கும் அம்சம். டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. பக்கெட் இருக்கைகளும் குறிப்பிட்டு கூறலாம்.

பிராண்டு மதிப்பை உயர்த்தும்

பிராண்டு மதிப்பை உயர்த்தும்

ஜெனிவா மோட்டார் ஷோவில் இந்த புதிய கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மெக்லாரன் பிராண்டு மதிப்பை உயர்த்தும் மாடல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The 2015 Geneva Motor Show will open its doors to general public on 5th to 15th of March, 2015. McLaren will be debuting their new supercar at the motor show. The UK based manufacturer has christened its new performance car as the 675LT, where LT stands for Long Tail.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X