மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 எஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் - விபரம்

By Saravana

இந்தியாவில் மெர்சிடிஸ்- ஏஎம்ஜி சி63 எஸ் சொகுசு கார் மாடல் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த காரின் இன்டிரியரை விசேஷ அம்சங்களுடன் கஸ்டமைஸ் செய்து கொள்ளும் வாய்ப்பையும் மெர்சிடிஸ் பென்ஸ் வழங்குகிறது.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி சி63 எஸ் காரில் 4.0 லிட்டர் வி8 ட்வின் டர்போ எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 510 பிஎஸ் பவரையும், 710 என்எம் டார்க்கையும் வழங்கும். 7 ஸ்பீடு ஏஎம்ஜி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் கார்

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.0 வினாடிகளில் எட்டிவிடும். அதிகபட்சமாக மணிக்கு 250 கிமீ வேகம் வரை எட்டும் வல்லமை கொண்டது.

கார்பன் செராமிக் பிரேக்குகள் ஆப்ஷனலாக வழங்கப்படுகிறது. ஏஎம்ஜி டைனமிக் செலக்ட் தொழில்நுட்பம், 3 ஸ்டேஜ் ரைடு கன்ட்ரோல் சிஸ்டம், பெர்ஃபார்மென்ஸ் புகைப்போக்கி குழாய் போன்றவை முக்கிய அம்சங்களாக இருக்கின்றன.

ரூ. 1.3 கோடி டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

Most Read Articles
English summary
The Mercedes-AMG C63 S has been launched in India. The C63 S comes with the Designo design option which lets customers customise the interior of the car including dashboard trims and seats.
Story first published: Thursday, September 3, 2015, 13:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X