நாளை இந்தியாவில் விற்பனைக்கு வரும் புதிய பென்ஸ் ஸ்போர்ட்ஸ் கார்!

By Saravana

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி எஸ் ஸ்போர்ட்ஸ் கார் இந்தியாவில் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுகிறது.

கடந்த ஆண்டு பாரீஸ் மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் மாடல் பல்வேறு நாடுகளிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து, நாளை முதல் இந்திய வாடிக்கையாளர்களின் கைகளுக்கும் சவால் தர தயாராகிவிட்டது.

இரண்டு மாடல்கள்

இரண்டு மாடல்கள்

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் பந்தய கார்களின் அடிப்படையில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த புதிய ஸ்போர்ட்ஸ் ரக கார் மாடல் ஏஎம்ஜி ஜிடி மற்றும் ஏஎம்ஜி ஜிடி எஸ் என்ற இரு மாடல்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஏஎம்ஜி ஜிடி எஸ் என்ற மாடல் நாளை விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. ஏஎம்ஜி ஜிடி மாடல் பின்னர் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மற்றொரு மாடல்

மற்றொரு மாடல்

ஏஎம்ஜி ஜிடி மாடலின் அடிப்படையில் பந்தய களங்களில் மட்டுமே பயன்படுத்தக்கூடிய மற்றொரு மாடலும் தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அந்த மாடல் ஏஎம்ஜி ஜிடி3 என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இந்த புதிய மாடல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

 பாதுகாப்பு கார்

பாதுகாப்பு கார்

மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி எஸ் கார் தற்போது ஃபார்முலா ஒன் கார் பந்தயங்களில், பாதுகாப்பு கார் மாடலாக பயன்படுத்தப்படுகிறது.

இறக்குமதி

இறக்குமதி

ஜெர்மனியில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஆலையில் உற்பத்தி செய்யப்படும் இந்த கார் இந்தியாவில் இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

நாளை விற்பனைக்கு வரும் மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி எஸ் கார் மாடலில் 503 பிஎச்பி பவரையும், 650 என்எம் டார்க்கையும் வழங்க வல்ல, இரட்டை டர்போ சார்ஜர்கள் கொண்ட 4.0 லிட்டர் வி8 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. 7 ஸ்பீடு ஏஎம்ஜி ஸ்பீடுஷிஃப்ட் டிசிடி கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 செயல்திறன்

செயல்திறன்

இந்திய மண்ணில் புழுதியை கிளப்ப தயாராகி இருக்கும் இந்த புதிய ஸ்போர்ட்ஸ் கார் 0- 100 கிமீ வேகத்தை 3.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு அதிகபட்சமாக 310 கிமீ வேகம் வரை தொடக்கூடியது.

விலை விபரம்

விலை விபரம்

சர்வதே அளவில் 1,29,900 டாலர்கள் [இந்திய மதிப்பில் ரூ86 லட்சம்] விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இறக்குமதி வரியையும் சேர்த்து கணக்கிட்டால் ரூ.2.25 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 15-15 இலக்கு

15-15 இலக்கு

இந்த ஆண்டு 15 புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்வதை இலக்காக அறிவித்தது மெர்சிடிஸ் பென்ஸ். அதன்படி, 13 மாடல்களை இதுவரை களமிறக்கிவிட்டது. இந்த நிலையில், இந்த ஆண்டில் இந்தியாவில் அந்த நிறுவனத்தின் 14வது புதிய கார் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி எஸ் கார் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Mercedes-Benz will be launching the AMG GT S in India on November 24, 2015. The Mercedes-AMG GT S was introduced at the 2014 Paris Motor Show and later in several markets post its unveil. Now, the supercar will be on offer to the Indian customers as well. The AMG GT S is the fourteenth product launch for Mercedes-Benz India during 2015.
Story first published: Monday, November 23, 2015, 18:01 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X