பலமான வரவேற்பு... இந்தியாவிலேயே பென்ஸ் ஜிஎல்ஏ எஸ்யூவி உற்பத்தி துவங்கியது!

இந்தியாவில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜிஎல்ஏ காருக்கான வரவேற்பு சிறப்பாக இருக்கிறது. இதையடுத்து, தற்போது இந்த கார் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்படுகிறது.

புனேயில், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் புதிதாக அமைத்திருக்கும் இரண்டாவது ஆலையின் உற்பத்தி பிரிவிலிருந்து, இந்த புதிய க்ராஸ்ஓவர் மாடலின் முதல் கார் நேற்று வெளிவந்தது. பிரத்யேக படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

ஆலை விரிவாக்கம்

ஆலை விரிவாக்கம்

மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகிலுள்ள சகனில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஆலை செயல்பட்டு வருகிறது. முக்கிய உதிரிபாகங்கள் இறக்குமதி செய்து இந்த ஆலையில் கார்கள் கட்டமைக்கப்படுகின்றன. இங்கு தற்போது பென்ஸ் சி கிளாஸ், இ கிளாஸ், எஸ் கிளாஸ், எம் கிளாஸ் மற்றும் ஜிஎல் கிளாஸ் கார்கள் அசெம்பிள் செய்யப்படுகின்றன. இந்த வரிசையில், ஆறாவது கார் மாடலாக பென்ஸ் ஜிஎல்ஏ க்ராஸ்ஓவரும் இந்த ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது.

உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம்

உள்நாட்டு உற்பத்திக்கு முக்கியத்துவம்

மஹாராஷ்டிர மாநிலம், புனே அருகிலுள்ள சகனில் மெர்சிடிஸ் பென்ஸ் கார் ஆலை செயல்பட்டு வருகிறது. முக்கிய உதிரிபாகங்கள் இறக்குமதி செய்து இந்த ஆலையில் கார்கள் கட்டமைக்கப்படுகின்றன. இங்கு தற்போது பென்ஸ் சி கிளாஸ், இ கிளாஸ், எஸ் கிளாஸ், எம் கிளாஸ் மற்றும் ஜிஎல் கிளாஸ் கார்கள் அசெம்பிள் செய்யப்படுகின்றன. இந்த வரிசையில், ஆறாவது கார் மாடலாக பென்ஸ் ஜிஎல்ஏ க்ராஸ்ஓவரும் இந்த ஆலையில் அசெம்பிள் செய்யப்படுகிறது.

மேட் இன் இந்தியா ஜிஎல்ஏ

மேட் இன் இந்தியா ஜிஎல்ஏ

இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ கிளாஸ் காரில் அதிகபட்சமாக 134 குதிரைசக்தி திறனை அளிக்கும் 2,143சிசி டீசல் எஞ்சின் உள்ளது. இந்த காரில் 7 ஸ்பீடு டியூவல் க்ளட்ச் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

முக்கிய வசதிகள்

முக்கிய வசதிகள்

பகல்நேர விளக்குகளுடன் கூடிய பை- ஸினான் ஹெட்லைட்டுகள், 18 இன்ச் அலாய் வீல்கள், அர்டிகோ லெதர் அப்ஹோல்ஸ்டரி, 14.7 செமீ திரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹார்மன் கார்டன் லாஜிக் 7 சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை முக்கிய வசதிகள். இதுதவிர, பல பாதுகாப்பு வசதிகளையும் கொண்டிருக்கிறது.

விலை விபரம்

விலை விபரம்

இந்தியாவில் அசெம்பிள் செய்யப்படும் பென்ஸ் ஜிஎல்ஏ டீசல் கார் இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

ஜிஎல்ஏ 200சிடிஐ ஸ்டைல்: ரூ.31.31 லட்சம்

ஜிஎல்ஏ 200சிடிஐ ஸ்போர்ட்: ரூ.34.25 லட்சம்

அனைத்தும் புனே எக்ஸ்ஷோரூம் விலை

Most Read Articles
English summary
Mercedes-Benz has started production of the GLA SUV in India. The GLA will be the first new generation car to be locally manufactured in India. The GLA-Class is seeing an increase in demand with Indian customers, and hence the move for local production in Chakan.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X