கூடுதல் வசதிகளுடன் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் கார் அறிமுகம்!

By Saravana

இந்தியாவில் 30,000 மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் சொகுசு கார்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்பட்டிருக்கும் சொகுசு செடான் கார் என்ற பெருமையையும் இந்த கார் பெற்றிருக்கிறது.

இதனை கொண்டாடும் விதத்தில் கூடுதல் வசதிகளுடன் 2016 மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பிரபல மாடல்

பிரபல மாடல்

சொகுசு கார் வாங்குபவர்கள் மத்தியில் ஓர் சிறந்த தேர்வுக்கான மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் இ கிளாஸ் கார் விளங்குகிறது. உலக அளவில் 13 மில்லியன் கார்களும், இந்தியாவில் மட்டும் இதுவரை 30,000 கார்களும் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

கூடுதல் வசதிகள்

கூடுதல் வசதிகள்

புதிய இ கிளாஸ் காரில் 20.3 செமீ திரையுடன் கூடிய டெலிமேட்டிக்ஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், கார்மின் பைலட் மேப் நேவிகேஷன் சிஸ்டம் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன. மேலும், ரிவர்ஸ் கேமரா தற்போது நிரந்தர ஆக்சஸெரீயாக இடம்பிடித்துள்ளது.

 டெலிமேட்டிக்ஸ் மல்டிமீடியா சிஸ்டம்

டெலிமேட்டிக்ஸ் மல்டிமீடியா சிஸ்டம்

இதன் டெலிமேட்டிக்ஸ் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தின் மூலமாக ஐபாட், ஐபோன் போன்றவற்றை இணைந்துக் கொண்டு பல்வேறு வசதிகளை பெற முடியும். புளூடூத், ஹேண்ட்ஸ் ஃப்ரீ, எஸ்டி கார்டு ஸ்லாட், இன்டர்நெட் தொடர்பு போன்ற பல்வேறு வசதிகளை அளிக்கும்.

எஞ்சின் ஆப்ஷன்கள்

எஞ்சின் ஆப்ஷன்கள்

முந்தயை மாடலில் இருந்த அதே மூன்று எஞ்சின் ஆப்ஷன்களில் புதிய மாடலும் வந்துள்ளது. 181 பிஎச்பி பவரையும், 300 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 201 பிஎச்பி பவரையும், 500என்எம் டார்க்கையும் வழங்கும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின், 261 பிஎச்பி பவரையும், 620 என்எம் டார்க்கையும் வழங்கும் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும்.

விலை விபரம்

விலை விபரம்

மெர்சிடிஸ் பென்ஸ் இ-200 பெட்ரோல்: ரூ.48.50 லட்சம்

மெர்சிடிஸ் பென்ஸ் இ-250 சிடிஐ: ரூ.50.70 லட்சம்

மெர்சிடிஸ் பென்ஸ் இ-350 சிடிஐ: ரூ.59.90 லட்சம்

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலை

Most Read Articles
English summary
The launch of new E-Class comes as a celebration of selling 30,000 of these sedan in India. Since its primary launch in India E-Class has been a popular choice among luxury car buyers.
Story first published: Thursday, June 25, 2015, 11:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X