ரூ.8.9 கோடியில் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது பென்ஸ் எஸ் கார்டு!

By Saravana

ரூ.8.9 கோடி விலையில் [எக்ஸ்ஷோரூம்] புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 கார்டு கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

உலகிலேயே அதிசிறந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட காராக இதனை குறிப்பிடுகின்றனர். இந்த காரில் இருக்கும் பிரத்யேக அம்சங்கள் குறித்து அறிமுக விழாவிலிருந்து எமது சிறப்பு நிருபர் வழங்கியத் தகவல்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

பாதுகாப்பு தர நிலை

பாதுகாப்பு தர நிலை

இந்த புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 கார்டு என்ற குண்டுதுளைக்காத கார் மாடல் விஆர்-9 என்ற சர்வதேச பாதுகாப்பு தர நிர்ணய நிலைக்கு நிகரானது. அதாவது, சக்திவாய்ந்த துப்பாக்கிகள் மூலம் நடத்தப்படும் தாக்குதல்களிலிருந்து பயணிகளை காப்பாற்றும் சிறப்பம்சம் கொண்டது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

கைத்துப்பாக்கிகள், எந்திர துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், சக்திவாய்ந்த வெடிகுண்டு தாக்குதல்களில்கூட காருக்கு அதிக பாதிப்பு ஏற்படாது.

உறுதிமிக்க பாகங்கள்

உறுதிமிக்க பாகங்கள்

இந்த காரின் எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் உள்ளிட்டவை அதிக உறுதிகொண்ட பாகங்களால் தயாரிக்கப்பட்டவை. அலுமினியத்திற்கு பதிலாக அதிக அளவில் ஸ்டீல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதிக தடிமன் கொண்ட கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள், விண்ட்ஷீல்டுகள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

விசேஷ டயர்கள்

விசேஷ டயர்கள்

இந்த புதிய மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்600 கார்டு மாடலில் விசேஷ ரன் ப்ளாட் டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. இதன்மூலம், கார் குண்டு வெடிப்பில் சிக்கி சேதமடைந்தாலும், 80 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.

எஞ்சின்

எஞ்சின்

குண்டு துளைக்காத அம்சங்களுடன் கவச வாகனம் போன்று வடிவமைக்கப்பட்டிருப்பதால், அதிக எடை கொண்டது. இந்த எடையை செம்மையாக கையாண்டு பயணிகளை துரிதமாக ஆபத்து சமயங்களில் தப்பிச் செல்வதற்கு ஏதுவாக அதிசக்திவாய்ந்த வி12 எஞ்சின் உள்ளது. இந்த எஞ்சின் 530 பிஎஸ் பவரையும், 830 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக அளிக்கக்கூடியது.

இதர வசதிகள்

இதர வசதிகள்

நைட் வியூ அசிஸ்ட், 360 டிகிரி கேமரா, காருக்குள் காற்றை சுத்திகரித்து அனுப்பும் வசதி, எளிதில் தீப்பிடிக்காத பாகங்களுடன் இந்த கார் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

ஓட்டுனர்களுக்கு பயிற்சி

ஓட்டுனர்களுக்கு பயிற்சி

இந்த காரை இயக்குவதற்கு வாடிக்கையாளர் அனுப்பும் இரண்டு டிரைவர்களுக்கு 48 மணிநேரம் பயிற்சியளிக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ்.

எடை

எடை

ஒவ்வொரு கண்ணாடி ஜன்னலும் 80 கிலோ எடையும், 65மிமீ தடிமனும் கொண்டது. ஒட்டுமொத்தமாக காரின் எடை 4 டன் ஆகும்.

சொகுசு வசதிகள்

சொகுசு வசதிகள்

உலகிலேயே சிறந்த சொகுசு கார் மாடல்களில் ஒன்று மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் என்பது நீங்கள் அறிந்ததே. எனவே, இந்த காரில் சொகுசு வசதிகளுக்கு கொஞ்சமும் பஞ்சமில்லை.

Most Read Articles
English summary
German carmaker Mercedes-Benz has launched the S600 Guard in India today. This is an armoured car and Mercedes call it "One Of The Safest Luxury Spots On Earth".
Story first published: Thursday, May 21, 2015, 15:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X