மெர்சிடிஸ் மேபக் சொகுசு கார் விற்பனைக்கு வந்தது - விபரம்!

இந்தியாவில் மெர்சிடிஸ் மேபக் சொகுசு கார் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. புனேயில் நடந்த நிகழ்ச்சியில் சற்றுமுன் இந்த காரை மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிர்வாக இயக்குனர் எபர்ஹார்டு கெர்ன் அறிமுகம் செய்தார்.

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரின் அடிப்படையிலான நீட்டிக்கப்பட்ட வீல் பேஸ் கொண்ட சொகுசு கார் மாடலாக வந்துள்ளது. மெர்சிடிஸ் மேபக் எஸ் 600 மற்றும் எஸ்500 ஆகிய இரு மாடல்களில் விற்பனை செய்யப்படும்.

இதில் மேபக் எஸ் 600 மாடல் இறக்குமதி செய்தும், எஸ்500 மாடல் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. மிக சிறப்பான இடவசதி, சொகுசு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் ததும்பும் வகையில், இந்த கார் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் அனைத்து வசதிகளையும் ஸ்லைடரில் காணலாம்.

வீல் பேஸ் அதிகம்

வீல் பேஸ் அதிகம்

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் 600 கிளாஸ் காரின் அடிப்படையிலான இந்த மெர்சிடிஸ் மேபக் சொகுசு கார் 200மிமீ கூடுதல் வீல்பேஸ் கொண்டது. இதனால், உட்புறத்தில் மிக தாராளமான இடவசதியை அளிக்கிறது.

டிசைன்

டிசைன்

மெர்சிடிஸ் பென்ஸ் எஸ் கிளாஸ் காரின் எஸ்-600 மாடலுக்கும், இந்த காரின் தோற்றத்திலும் அதிக வித்தியாசங்கள் இல்லை. ஆனால், வீல் பேஸ் அதிகரிக்கப்பட்டதால், லிமோசின் ரகத்தை சார்ந்த மாடலாக தோற்றமளிக்கிறது. மெர்சிடிஸ் பென்ஸ் மேபக் எஸ்-600 காரில் க்ரோம் பினிஷ் செய்யப்பட்ட மேக் வீல்கள் கொடுக்கப்பட்டிருப்பது மிக மிக கவர்ச்சியாக இருப்பதை குறிப்பிட்டாக வேண்டும்.

 இன்டிரியர்

இன்டிரியர்

அதீத இடவசதியுடன் உயர்தரமும், அழகும் இழைந்தோடும் விதத்திலான இன்டிரியர் ஃபினிஷ் பயணிப்பவர்களுக்கு ஒவ்வொரு முறையும் சொர்க்க லோக அனுபவத்தை வழங்கும். பின்புறத்தில் எக்ஸ்கியூட்டிவ் இருக்கைகள் நிரந்தர அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. பேக் ரெஸ்ட், ஃபுட்ரெஸ்ட் போன்றவற்றை தனித்தனியாக அட்ஜெஸ்ட் செய்யும் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. மசாஜ் வசதியுடன் கூடிய இருக்கை அமைப்பும் களைப்பை போக்கும். லெதர் அப்ஹோல்ஸ்டரி உள்ளது. பின்புறத்தில் கூலர் பாக்ஸ் வசதியுடன் கூடிய ஆர்ம் ரெஸ்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது. பர்ம்ஸ்டெர் 3டி ஆடியோ சிஸ்டம் சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக இருக்கும்.

 நிசப்தமான கேபின்

நிசப்தமான கேபின்

வெளிப்புற சப்தம் மற்றும் அதிர்வுகளை பயணிப்பவர்கள் உணராத வகையில், மிகச்சிறப்பான சப்த தடுப்பு கட்டமைப்பு கொண்ட கார் மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் பெருமிதம் தெரிவிக்கிறது. மேலும், விண்ட் டியூனல் சோதனைகள் மூலமாக இது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

ஓட்டுனர் அயர்வதை கண்டறிந்து எச்சரிக்கும் வசதி, மோதல்களை தவிர்க்கும் கொலிஷன் பிரிவென்ட் வசதி, சீட் பெல்ட் ஏர்பேக்குகள் மற்றும் பயணிகளை அனைத்து விதமான மோதல்களிலிருந்து காப்பதற்கு 12 ஏர்பேக்குகள், பாதசாரிகளை கண்டுணர்ந்து செயல்படும் அவசர கால பிரேக் சிஸ்டம், தடம் மாறும்போது ஆபத்துக்களை எச்சரிக்கும் வசதி, அடாப்டிவ் ஹெட்லைட்ஸ், இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும் நைட் வியூ அசிஸ்ட் சிஸ்டம் என பாதுகாப்பு விஷயங்களின் பட்டியல் நீண்டு செல்கிறது.

சக்திவாய்ந்த எஞ்சின்

சக்திவாய்ந்த எஞ்சின்

அதிசக்திவாய்ந்த இந்த காரின் எஸ்600 மாடலில் 6.0 லிட்டர் வி12 பை- டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 530 பிஎஸ் பவரையும், 830 என்எம் டார்க்கையும் வாரி வழங்கும். இந்த காரில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் புதிய 7ஜி ட்ரோனிக் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. எஸ்500 மாடலில் 4.6 லிட்டர் பை டர்போ எஞ்சின் இருக்கிறது. அதிகபட்சமாக 455 பிஎஸ் பவரை அளிக்கும்.

டாப் ஸ்பீடு

டாப் ஸ்பீடு

இடவசதி, சொகுசு அம்சங்களில் மட்டுமின்றி, செயல்திறனிலும் மிகச் சிறப்பான மாடலாக இருக்கிறது. இதன் சக்திவாய்ந்த எஞ்சின், இந்த கனரக கார் மாடலை மணிக்கு 250 கிமீ வேகம் வரை தொடச் செய்யும். அத்துடன், 0- 100 கிமீ வேகத்தை வெறும் 5.0 வினாடிகளில் தொட்டுவிடுவதற்கு உறுதி செய்கிறது.

விலை விபரம்

விலை விபரம்

ரூ.2.60 கோடி புனே எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய மெர்சிடிஸ் மேபக் எஸ்600 கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட இருக்கும் மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சரவெடி மாடல்கள்

சரவெடி மாடல்கள்

இந்த ஆண்டு இந்தியாவில் 15 புதிய மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக மெர்சிடிஸ் பென்ஸ் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், இந்த மெர்சிடிஸ் மேபக் எஸ்600 சொகுசு கார் 12வது மாடலாக மெர்சிடிஸ் பென்ஸ் அறிமுகம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விடைபெறுகிறார் எபர்ஹார்டு கெர்ன்

விடைபெறுகிறார் எபர்ஹார்டு கெர்ன்

கடந்த மூன்று ஆண்டுகளாக மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பொறுப்பு வகித்து வந்த எபர்ஹார்டு கெர்ன், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் வேறு பொறுப்புக்கு மாற்றம் செய்யப்பட உள்ளார். இதுதான் அவர் மெர்சிடிஸ் பென்ஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக கடைசியாக பங்கேற்ற நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் இந்திய வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற செய்தவர். இவருக்கு பதிலாக புதிய நிர்வாக இயக்குனராக ரோலன்ட் எஸ் போல்ஜர் பொறுப்பேற்க உள்ளார்.

Most Read Articles
English summary
Mercedes-Maybach S600 has been launched in India for INR 2.6 crore (ex-showroom Pune). This will be available in India as a Completely Built Unit (CBU). This is the 12th product launched by Mercedes as a part of its 15 product launch strategy in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X