இந்தியாவில் மினி கூப்பர் காரின் பெட்ரோல் மாடல் விற்பனைக்கு வந்தது!

By Saravana

புதிய மினி கூப்பர் காரின் பெட்ரோல் மாடல் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மினி கூப்பர் எஸ் என்ற பெயரில் இந்த புதிய பெட்ரோல் மாடல் விற்பனை செய்யப்படும். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

மினி கார் நிறுவனத்தின் தாய் நிறுவனமான பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 1 சீரிஸ் கார் தயாரிக்கப்பட்ட அதே UKL பிளாட்ஃபார்மில்தான் இந்த புதிய மினி கூப்பர் மாடலும் உருவாக்கப்பட்டிருக்கிறது. முன்புற, பின்புற சஸ்பென்ஷன் அமைப்பு மேம்படுத்தப்பட்டு வந்துள்ளது.

வடிவம்

வடிவம்

புதிய மினி கூப்பர் கார் 3,821 மிமீ நீளம், 1,414 மிமீ உயரம், 1,727 மிமீ அகலம் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கார் 2,495 மிமீ வீல் பேஸ் உடையது.

 3 டோர் மாடல்

3 டோர் மாடல்

கடந்த ஆண்டு மினி கூப்பர் காரின் டீசல் மாடல் 3 டோர் மற்றும் 5 டோர் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுவிட்டது. இந்த நிலையில், பெட்ரோல் மாடல் 3 டோர் மாடலில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் 192 பிஎச்பி பவரையும், 280 என்எம் டார்க்கையும் வழங்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக வந்துள்ளது.

 மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு 18.2 கிமீ மைலேஜை தரும் என்று மினி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை

விலை

புதிய மினி கூப்பர் எஸ் கார் ரூ.34.65 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் இந்த புதிய கார் விற்பனைக்கு கிடைக்கும்.

Most Read Articles
English summary
Mini Cooper S has been launched in India for a price of INR 34,65,000 ex-showroom, India. It is their most sporty version of the hatchback till date. The manufacturer provides several sporty features to make it look and feel faster.
Story first published: Monday, March 16, 2015, 16:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X