மினி பிராண்டின் அடுத்த லிட்டில் சூப்பர்ஸ்டார்!

By Saravana

அடக்கமாகவும், அட்டகாசமாகவும் சொகுசு கார்களை தயாரிப்பதில் இங்கிலாந்தை சேரந்த மினி கார் நிறுவனம் சிறந்து விளங்குகிறது. இந்தியாவில் மினி பிராண்டு கார்களை சினிமா நட்சத்திரங்கள் விரும்பி வாங்கி வருகின்றனர்.

இந்த நிலையில், சூப்பர்லெகெரா எனப்படும் இலகு வகை பாடி கட்டமைப்பு கொண்ட தொழில்நுட்பத்தில் புதிய ரோட்ஸ்டெர் கார் மாடலை அந்த நிறுவனம் தயாரிக்க உள்ளது. அட்டகாசமான அந்த புத்தம் புதிய கார் மாடல் குறித்த கூடுதல் விபரங்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

கான்செப்ட்

கான்செப்ட்

கடந்த ஆணடு கான்கார்ஸோ டி எலிகன்ஸா வில்லா டி எஸ்டே கார் திருவிழாவில், புதிய சூப்பர்லெகெரா கார் மாடலின் கான்செப்ட்டை மினி கார் நிறுவனம் அறிமுகம் செய்தது. இந்த கான்செப்ட் மாடல் உற்பத்திக்கு கொண்டு செல்லப்படுமா என்பது கேள்விக்குறியாக இருந்து வந்தது. இந்தநிலையில், இந்த புதிய சூப்பர்லெகெரா மாடலை உற்பத்திக்கு கொண்டு செல்ல இருப்பதாக மினி கார் நிறுவனம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

டிசைன்

டிசைன்

இது திறந்த கூரை அமைப்பு கொண்ட ரோட்ஸ்டெர் மாடலாக வருகை தருகிறது. கான்செப்ட் மாடலின் முகப்பில் மினி கார்களுக்கே உரித்தான டிசைன் அம்சங்கள் உண்டு. மிக நீளமான மூக்கு அமைப்பு கொண்டதாக இருக்கும். ஹெட்லைட் இடம்பெற்றிருக்கிறது. ஆனால், க்ரில், பனி விளக்குகள் போன்றவை தயாரிப்புக்கான மாடலில் இடம் மாறுதல்களையும், மேம்படுத்தப்பட்டும் ஒரு தெளிவான முகப்பு அமைப்புடன் வரும் என்றும் நம்பலாம்.

ஸ்டைலு ஸ்டைலுதான்...

ஸ்டைலு ஸ்டைலுதான்...

பக்கவாட்டில் மிக ஸ்டைலான டிசைனாக இருக்கிறது. இரண்டு கதவுகள் கொண்ட மாடலாக வர இருக்கும் இந்த புதிய 2 சீட்டர் காரின் வின்ட்ஷீல்டு வித்தியாசமாகவும், நேர்த்தியான டிசைன் அமைப்பையும் கொண்டுள்ளது. அலாய் வீல்களும் கவனத்தை ஈர்க்கின்றன.

பின்புறத் தோற்றம்

பின்புறத் தோற்றம்

கான்செப்ட் மாடல் என்பதால் அதிக டீட்டெயிலிங் செய்யப்படாமல், எளிமையாக இருக்கிறது. அதேநேரத்தில், துடுப்பு போன்ற அமைப்பு அதிக ஏரோடைனமிக்ஸை வழங்குவதற்கான அமைப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது.

கச்சிதம்

கச்சிதம்

ஒட்டுமொத்தத்தில் வழக்கம்போல் ஓர் ஸ்டைலான மினி கார் மாடலாக உருவெடுக்க உள்ளது. எரிபொருள் டேங்க் மூடி முன்புறத்தில் குவார்ட்டர் பேனலில் கொடுக்கப்பட்டிருக்கிறது. மேலும், இருக்கை அமைப்பு, ஸ்டீயரிங் வீல், சென்ட்ரல் கன்சோல் ஆகியவை கவர்ச்சியாக இருக்கிறது.

 பிரிமியம் இன்டிரியர்

பிரிமியம் இன்டிரியர்

வழக்கம்போல் மிக சொகுசானதாகவும், பிரமியம் இன்டிரியர் அம்சங்களுடன் வருகிறது இந்த புதிய மினி கார். பிற மினி கார்களை போன்ற சென்ட்ரல் கன்சோல் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது.

இலகு எடை

இலகு எடை

இது இலகு எடை கொண்ட மாடல் என்பதை பல்வேறு உதிரிபாகங்களின் மூலமாக உணர்ந்து கொள்ளலாம். கசமுசா டிசைன் மற்றும் ஆக்சஸெரீகள் இல்லாமல் வரும் என்றும் நம்பலாம்.

 கையாளுமை

கையாளுமை

ஒரு முழுமையான ஸ்போர்ட்ஸ் கார் அனுபவத்தை இது வழங்கும் என மினி பிராண்டு நம்பிக்கை தெரிவிக்கிறது. இந்த புதிய கார் மிகச்சிறப்பான கையாளுமை கொண்டதாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

 எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

மினி கூப்பர் காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை இந்த காரிலும் பயன்படுத்த மினி பிராண்டு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 134 எச்பி பவரை வழங்க வல்லதாக இருக்கும்.

Most Read Articles
English summary
Mini is known for their small cars and compact vehicles over the past years. They have now decided to work on a two-seater sports car as a concept vehicle. They had showcased a Superleggera concept at 2014 Concorso d'Eleganza Villa d'Este. Mini had displayed this model in Italy and is now reporting that they will be putting it into production soon.
Story first published: Wednesday, July 22, 2015, 9:56 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X