புதிய மூன்று சக்கர எலக்ட்ரிக் வாகனத்தை களமிறக்கும் மார்கன்!

By Saravana

ஸ்போர்ட்ஸ் கார் தயாரிப்பில் புகழ்பெற்ற இங்கிலாந்த சேர்ந்த மார்கன் நிறுவனம், புதிய மூன்று சக்கர மின்சார வாகனம் ஒன்றை பார்வைக்காக அறிமுகம் செய்ய இருக்கிறது.

குட்வுட் ஆஃப் ஸ்பீடு வாகன திருவிழாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் இந்த புதிய மின்சார வாகனம் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

பெயர்

பெயர்

2012ம் ஆண்டு ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட ப்ளஸ் இ என்ற எலக்ட்ரிக் வாகன வரிசையில், இரண்டாவது மாடலாக இதனை மார்கன் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கு இவி3 என்ற பெயரிடப்பட்டிருக்கிறது.

 மின் மோட்டார்

மின் மோட்டார்

இந்த மின்சார வாகனத்தில் 101 பிஎச்பி சக்தியை அளிக்க வல்ல, ஒற்றை மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது சிறப்பான செயல்திறனை அளிக்க வல்லதாக மார்கன் குறிப்பிடுகிறது.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 241 கிலோமீட்டர் தூரம் வரை பயணிக்கலாம். எனவே, வாடிக்கையாளர்களை கவரும் மின்சார வாகனமாக மார்கன் கருதுகிறது.

விற்பனை

விற்பனை

அடுத்த ஆண்டு இந்த புதிய மார்கன் இவி3 விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இது புதிய கோணத்தில் மின்சார கார் மார்க்கெட்டை கொண்டு செல்லும் என்று மார்கன் நிறுவனம் தெரிவிக்கிறது.

Most Read Articles
English summary
Morgan, the Malvern based sports car manufacturer is all set to showcase an all electric version of it's three-wheeler during the Goodwood Festival of Speed.
Story first published: Saturday, June 20, 2015, 14:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X