விபத்து எதிரொலி: நந்தி மலையேற்ற மோட்டார் பந்தயம் ரத்து!

By Saravana

விபத்து எதிரொலியால், இன்று நடைபெற இருந்த நந்தி மலையேற்ற மோட்டார் பந்தயத்தின் இறுதிப்போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் நந்தி மலையேற்ற மோட்டார் பந்தயம் ரேஸ் பிரியர்கள் மத்தியில் பிரபலமானது. இன்னர் லைன் ரேஸிங் அமைப்பு இந்த போட்டிக்கு ஏற்பாடு செய்திருந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை நந்தி மலையேற்ற மோட்டார் பந்தயத்தின் பயிற்சி சுற்று நடந்தது.

Nandi Race 1

நேற்று மோட்டார்சைக்கிள்களுக்கும், இன்று கார்களுக்கு இறுதிப் போட்டி நடைபெற இருந்தது. நேற்று நடந்த மோட்டார்சைக்கிள் போட்டி நேரமின்மையால் சிறிய வகை மோட்டார்சைக்கிள்களுக்கான பந்தயம் மட்டும் நடந்தது.

இதையடுத்து, ஸ்போர்ட்ஸ் மற்றும் சூப்பர் பைக்குகளுக்கான பந்தயம் இன்று ஒத்திவைக்கப்பட்டது. அத்துடன் கார்களுக்கான மலையேற்றப் போட்டியும் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Nandi Hill 2

இந்தநிலையில், நேற்று மாலை 5.30 மணியளவில் பந்தயங்கள் நிறைவடைந்த பின்பு நடந்த ஒரு விபத்து காரணமாக, இன்றைய போட்டிகள் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. போட்டியை காண வந்த ஒருவர் பைக்கில் வீலிங் செய்தபோது, ஏற்பட்ட விபத்தையடுத்து போலீசார் கேட்டுக்கொண்டதற்கிணங்க போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த போட்டியில் பங்குகொள்ள பதிவு செய்து, ஓட்ட இயலாதவர்களுக்கு பதிவுக்கட்டணத்தை திரும்ப வழங்குவதாக இன்னர் லைன் ரேஸிங் அமைப்பு தெரிவித்துள்ளது. வரும் திங்கட்கிழமை காலை இன்னர் லைன் ரேஸிங் அலுவலகத்தில் பதிவுக் கட்டணத்தை வீரர்கள் திரும்ப பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Nandi Hill Climb

இந்த போட்டியில் பங்குகொள்வதற்காக பல்வேறு பகுதியிலிருந்தும் மிகுந்த பொருட்செலவு செய்து வாகனங்களை எடுத்து வந்த வீரர்களும், அணியினரும் பெருத்த ஏமாற்றமடைந்தனர்.

இன்னர் லைன் ரேஸிங் அலுவலக முகவரி:

25/2,G- 3, ரிச்சுவல் அபார்ட்மென்ட்ஸ்,
11வது மெயின், 14வது ஏ கிராஸ்,
மல்லேஸ்வரம்,
பெங்களூர்.
தொடர்புக்கு: 9916133143

Most Read Articles
English summary
As per the reports, Nandi hill climb event has been Cancelled due to unavoidable reasons.
Story first published: Thursday, January 22, 2015, 16:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X