டிரைவரில்லாமல் இயங்கும் கார் தொழில்நுட்பம்: நிசான்- நாசா கூட்டணி!

By Saravana

டிரைவரில்லாமல் இயங்கும் காருக்கான தானியங்கி கட்டுப்பாட்டு தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும், ஜப்பானிய கா் நிறுவனமான நிசானும் கைகோர்த்துள்ளன.

சாலைகளில் பாதுகாப்பான பயணத்திற்கும், டிரைவரின் உதவியில்லாமல் இயங்கும் தானியங்கி கார்களை உருவாக்கும் முயற்சிகள் தீவிரமடைந்திருக்கின்றன. அதில், ஜப்பானை சேர்ந்த நிறுவனமும் தானியங்கி கார் தொழில்நுட்பத்தை உருவாக்குவதில் முனைப்பு காட்டி வருகிறது. இந்த நிலையில், டிரைவரில்லாமல் இயங்கும் கார் தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவும், நிசான் கார் நிறுவனமும் கைகோர்த்துள்ளன.


கைகோர்க்கும் விஞ்ஞானிகள்

கைகோர்க்கும் விஞ்ஞானிகள்

அமெரிக்காவின் சிலிக்கான் வேலியில் உள்ள நிசான் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் நாசா அமைப்பின் விஞ்ஞானிகள் இணைந்து பணியாற்ற உள்ளனர்.

நோக்கம்

நோக்கம்

தானியங்கி கார்களுக்கான பாதுகாப்பு நுட்பங்களை மேம்படுத்துவதுடன், குறைவான புகை வெளியிடும் தன்மை கொண்டதாகவும் தொழில்நுட்பத்தை மேம்படுத்த இந்த கூட்டணி திட்டமிட்டுள்ளது.

 நிசான் லீஃப்

நிசான் லீஃப்

நிசான் நிறுவனத்தின் லீஃப் எலக்ட்ரிக் காரிலும், இன்ஃபினிட்டி சொகுசு கார் மாடல்களில் இந்த புதிய தொழில்நுட்பத்தை வரும் 2016 முதல் 2020க்குள் கொண்டு வர நிசான் திட்டமிட்டுள்ளது.

விண்வெளி காரில்...

விண்வெளி காரில்...

சந்திரனில் ஆய்வு செய்ய அனுப்பப்படும் தானியங்கி வாகனங்களில் இந்த புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்ள நாசா திட்டமிட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பம்

புதிய தொழில்நுட்பம்

அடுத்த 5 ஆண்டுகளில் டிரைவரில்லாமல் இயங்கும் கார்களுக்கான தொழில்நுட்பத்தை உருவாக்கிவிடும் நோக்கில் இந்த கூட்டணி செயல்படும்.

Most Read Articles
English summary
Japanese automaker Nissan and NASA are teaming up to advance the technology behind cars that drive themselves.
Story first published: Monday, January 12, 2015, 10:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X