ஏப்ரல் 23ல் விற்பனைக்கு வருகிறது புதிய ஆடி டிடி கார்!

ஜனவரி முதல் மார்ச் வரையிலான விற்பனையில் ஆடி கார் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி முதலிடத்தில் இருக்கிறது மெர்சிடிஸ் பென்ஸ். இதனால், அதிர்ச்சிடயைந்திருக்கும் ஆடி கார் நிறுவனம் அவசரம் அவசரமாக புதிதாக நான்கு கார் மாடல்களை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளது.

அதன்படி, கடந்த மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தலைமுறை ஆடி டிடி காரை வரும் 23ந் தேதி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய ஆடி முடிவு செய்துள்ளது. இன்னும் சில மாதங்கள் கழித்துதான் புதிய ஆடி டிடி கார் வரும் என்று எதிர்பார்க்கப்பட் நிலையில், இருக்கும் நெருக்கடியை கருதி, உடனடியாக அந்த காரை விற்பனைக்கு கொண்டு வருகிறது ஆடி கார் நிறுவனம்.

புதிய பிளாட்ஃபார்ம்

புதிய பிளாட்ஃபார்ம்

ஆடி நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் புதிய MQB பிளாட்ஃபார்மில் இந்த மூன்றாம் தலைமுறை ஆடி டிடி கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் மாடலைவிட இந்த புதிய மாடலின் எடை 50 கிலோ வரை குறைக்கப்பட்டுள்ளது.

மாற்றங்கள்

மாற்றங்கள்

எல்இடி ஹெட்லைட்டுகள் மற்றும் டெயில்லைட்டுகள், எல்இடி மீட்டர் கன்சோல், தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்போர்ட்டியான ஸ்டீயரிங் வீல், பேடில் ஷிப்ட் வசதியுடன் புதிய ஆடி டிடி கார் வருகிறது. இந்த காரின் இன்டிரியர் மிகச்சிறப்பாக மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்தியாவில் புதிய ஆடி டிடி கார் 45 TFSI க்வாட்ரோ என்ற ஒரேயொரு எஞ்சின் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கும். இந்த காரில் இருக்கும் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 230 எச்பி பவரையும், 370 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். தற்போதைய மாடலைவிட இந்த புதிய மாடலின் எஞ்சின் 19 எச்பி பவரையும், 20 என்எம் டார்க்கையும் கூடுதலாக வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

செயல்திறன்

செயல்திறன்

இந்த காரில் எஸ் ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு இருக்கிறது. 0 -100 கிமீ வேகத்தை 5.3 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு அதிகபட்சமாக 245 கிமீ வேகம் வரை செல்லக்கூடிய திறன் கொண்டது. மேம்படுத்தப்பட்ட எஞ்சின் தவிர்த்து, வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் டிசைன் மாற்றங்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் வருகிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.55 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய ஆடி டிடி கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய கார் இறக்குமதி செய்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும்.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

பிஎம்டபிள்யூ இசட்4 மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்எல்கே கார்களுக்கு இது நேரடி போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
New Audi TT To Be Launched In India on 23rd April 2015.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X