ஹூண்டாய் கார்களுக்கான புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன்

ஹூண்டாய் கார்களுக்கான புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் விபரங்கள் வெளியீடப்பட்டுள்ளன. அமெரிக்காவில் நாளை துவங்கும் சிஇஎஸ் தொழில்நுட்ப கண்காட்சியில் இந்த புதிய ஆன்ட்ராய்டு அப்ளிகேஷன் 2015 சொனாட்டா கான்செப்ட் காருடன் சேர்த்து காட்சிக்கு வைக்கப்பட உள்ளது.

இந்த புதிய அப்ளிகேஷனுக்கு புளூலிங்க் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த அப்ளிகேஷனின் முக்கிய அம்சமே ரிமோட் கன்ட்ரோல் மூலம் பல்வேறு வசதிகளை அளிப்பதுதான்.

Hyundai Car

ரிமோட் கன்ட்ரோல் முறையில் கார் எஞ்சினை ஆன் செய்வது, ஆஃப் செய்வது, கதவுகளை திறந்து மூடுவது, பெரிய பார்க்கிங் வளாகங்களில் காலி இடத்தை கண்டுபிடிப்பது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை இந்த புதிய அப்ளிகேஷன் மூலம் பெற முடியும்.

இந்த ஆண்டின் முதல் காலாண்டுக்குள் இந்த புதிய அப்ளிகேஷனை கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இந்த அப்ளிகேஷன் கொண்ட பிரத்யேக ஸ்மார்ட் கைக்கடிகாரத்தையும் ஹூண்டாய் அறிமுகம் செய்துள்ளது. ஹூண்ண்டாய் புளூ லிங்க் சாஃப்ட்வேர் கொண்ட அனைத்து கார்களிலும் இந்த வசதியை பெற முடியும்.

அனைத்து ஆன்ட்ராய்டு சாதனங்களிலும் இந்த அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும் என்று ஹூண்டாய் தெரிவித்திருக்கிறது.

Most Read Articles
English summary
South Korean car manufacturer Hyundai has announced their new Android Wear app that allows users to control their cars from their wrist.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X