ஹோண்டாவின் புதிய மினி எஸ்யூவி அறிமுகம் - படங்களுடன், தகவல்கள்

ஹோண்டாவின் புதிய மினி எஸ்யூவி மாடல் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. டிசைன், ஓட்டுதல் தரம், எரிபொருள் சிக்கனம் மற்றும் பெர்ஃபார்மென்ஸ் என அனைத்து விதத்திலும் இந்த புதிய மினி எஸ்யூவி மிகச்சிறப்பானதாக இருக்கும் என்று ஹோண்டா தெரிவித்திருக்கிறது.

ஹோண்டா சிஆர்-வி எஸ்யூவியின் மினி மாடலாக இது நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த புதிய எஸ்யூவியின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


 கம்பீர தோற்றம்

கம்பீர தோற்றம்

முன்புறம் எஸ்யூவி போன்று எடுப்பான முகப்பு, பின்புறம் கூபே கார்களின் டிசைன் போன்ற தாழ்வான கூரை வடிவமைப்பு போன்ற டிசைன் தாத்பரியங்கள் மூலம் தனித்துவமான ஸ்டைலில் தோற்றமளிக்கிறது.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய க்ராஸ்ஓவர் மாடலில் 130 பிஎஸ் பவரை வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 120 பிஎஸ் பவரை அளிக்கும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்டதாக விற்பனைக்கு வருகிறது. இரண்டிலும் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது சிவிடி கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும்.

பொருட்களுக்கான இடவசதி

பொருட்களுக்கான இடவசதி

இந்த எஸ்யூவியில் 453 லிட்டர் கொள்ளளவு கொண்ட பூட்ரூம் உள்ளது. பின் இருக்கையை மடக்கினால், 1,026 லிட்டர் கொள்ளளவுக்கு இடவசதி கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

இந்த எஸ்யூவியில் 7 இஞ்ச் ஹோண்டா கனெக்ட் ஸ்கிரீன் கொடுக்கப்பட்டுள்ளது. இது ஸ்மார்ட்போன் போன்று பல்வேறு வசதிகளை தரும். ஆன்ட்ராய்டு 4.0.4 ஆபரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். மேலும், இதற்கு இன்டர்நெட் வசதியையும் பெற முடியும் என்பதால், பிரவுசிங், சமூகவலைதள தொடர்பு, இன்டர்நெட் மியூசிக் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெற முடியும்.

ஐரோப்பிய மார்க்கெட்

ஐரோப்பிய மார்க்கெட்

இந்த புதிய ஹோண்டா எச்ஆர்-வி ஐரோப்பிய மார்க்கெட்டில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதர மார்க்கெட்டுகளில் அறிமுகம் செய்யப்படுமா என்பது குறித்த தகவல் இல்லை.

Most Read Articles
English summary
The latest Honda HR-V has been revealed for 2015, with the company showcasing the new crossover with ‘dynamic styling, the versatility of an MPV, sophisticated-yet-fun driving dynamics and fuel-efficient performance.'
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X