போட்டியாளர்களின் வயிற்றில் புளியை கரைக்கும் புதிய ஹோண்டா ஜாஸ் மைலேஜ்!

By Saravana

புத்தம் புதிய டிசைன், டீசல் எஞ்சின், நவீன வசதிகள், இடவசதி என அனைத்திலும் தன்னிறவை அளிக்கக்கூடிய ஓர் பிரிமியம் ஹேட்ச்பேக் மாடலின் வரவை எதிர்பார்த்து நம் நாட்டு வாடிக்கையாளர்களும், ஆட்டோமொபைல் துறையினரும் காத்திருக்கின்றனர்.

அது புதிய தலைமுறை ஹோண்டா ஜாஸ் கார். ஆம், புதிய ஹோண்டா ஜாஸ் காரின் மைலேஜ் உள்ளிட்ட பல முக்கிய விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை ஸ்லைடரில் காணலாம்.

முன்பதிவு

முன்பதிவு

புதிய ஹோண்டா ஜாஸ் காருக்கு தற்போது நாடு முழுவதும் உள்ள ஹோண்டா கார் நிறுவனத்தின் டீலர்களில் முன்பதிவு செய்யப்படுகிறது. ரூ.21,000 முதல் ரூ.50,000 வரை பெற்றுக் கொண்டு முன்பதிவு செய்யப்படுகிறது.

 டீசல் எஞ்சின்

டீசல் எஞ்சின்

பெட்ரோல் எஞ்சினை பற்றிய அறிமுகம் தேவையில்லை. ஏற்கனவே இருந்த அதே 1.2 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் எஞ்சின்தான் இடம்பெற உள்ளது. இது அதிகபட்சமாக 87 பிஎச்பி பவரை அதிகபட்சமாக வழங்கும் திறன் கொண்டதாக இருக்கும். ஆனால், எதிர்பார்ப்புக்குரிய மாடல் புதிய ஜாஸ் காரின் டீசல் மாடல்தான். டீசல் மாடலில் 100 பிஎM் பவரையும், 200என்எம் டார்க்கையும் வழங்கும் 1.5 லிட்டர் ஐ-டிடெக் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும்.

 கியர்பாக்ஸ்

கியர்பாக்ஸ்

பெட்ரோல் மாடல் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல்களிலும், டீசல் மாடல் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும் விற்பனைக்கு வர இருக்கிறது.

ஆஹா மைலேஜ்...

ஆஹா மைலேஜ்...

புதிய ஹோண்டா ஜாஸ் காரின் டீசல் மாடல் லிட்டருக்கு 27.3 கிமீ மைலேஜ் தரும் என அராய் சான்று அளித்துள்ளது. இதுதான் இந்திய ஆட்டோமொபைல் துறையின் இப்போதைய ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. அதாவது, மாருதி டிசையருக்கு அடுத்து, இந்தியாவின் அதிக மைலேஜ் தரும் கார் என்ற பெருமையை புதிய ஹோண்டா ஜாஸ் காருக்கு கிடைக்க இருக்கிறது.

 பெட்ரோல் மைலேஜ்

பெட்ரோல் மைலேஜ்

பெட்ரோல் மாடலின் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 18.7 கிமீ மைலேஜையும், சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 19 கிமீ மைலேஜையும் வழங்கும் என அராய் சான்றளித்துள்ளது. எனவே, போட்டியாளர்களுக்கு மைலேஜிலும் சிம்ம சொப்பனமாக வர இருக்கிறது புதிய ஹோண்டா ஜாஸ் கார்.

விற்பனைக்கு அறிமுகம்?

விற்பனைக்கு அறிமுகம்?

அடுத்த மாதம் 8ந் தேதி புதிய ஹோண்டா ஜாஸ் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Most Read Articles
English summary
New Honda Jazz Diesel Mileage Details Leaked.
Story first published: Monday, June 15, 2015, 14:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X