புதிய ஹூண்டாய் க்ரெட்டா வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்!

By Saravana

வரும் 21ந் தேதி புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. டஸ்ட்டர், ஈக்கோஸ்போர்ட் மார்க்கெட்டை குறிவைத்து வரும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியை வாடிக்கையாளர்கள் பலர் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில், இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் வேரியண்ட் வாரியான வசதிகள் அடங்கிய விபரக் குறிப்பேடு டீம் பிஎச்பி தளம் மூலமாக வெளியாகியுள்ளது. கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

 வேரியண்ட் விபரம்

வேரியண்ட் விபரம்

பெட்ரோல், டீசல் மாடல்களில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவி Base, S, S+, SX, SX+ மற்றும் SX[O] ஆகிய வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது.

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடல்

பெட்ரோல் மாடலில் 124 பிஎச்பி பவரையும், 151 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.6 லிட்டர் எஞ்சின் கொண்டதாக வருகிறது. இந்த எஞ்சின் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக இருக்கும். 1.6 லிட்டர் பெட்ரோல் மாடல் Base, S மற்றும் S+ ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

டீசல் மாடல்கள்

டீசல் மாடல்கள்

டீசல் மாடல் இருவிதமான எஞ்சின் ஆப்ஷன்களில் கிடைக்கும். 89 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க்கையும் வழங்கும் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் ஒன்று. இந்த 1.4 லிட்டர் டீசல் மாடல் SX, SX+ மற்றும் SX[O] ஆகிய வேரியண்ட்டுகளில் கிடைக்கும். மற்றொரு டீசல் மாடலில் 131 பிஎச்பி பவரையும், 260என்எம் டார்க்கையும் வழங்கும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த டீசல் மாடல் SX+ என்ற ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே கிடைக்கும். இரண்டு மாடல்களிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

அனைத்து வேரியண்ட்டுகளிலும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் நிரந்தரமான பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. பேஸ் மாடல் மற்றும் எஸ் வேரியண்ட்டுகளை தவிர்த்து பிற அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்ஸ் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. எஸ்எக்ஸ் ஆப்ஷனல் என்ற டாப் வேரியண்ட்டில் சைடு மற்றும் கர்டெயின் ஏர்பேக்ஸ் நிரந்தர பாதுகாப்பு அம்சமாக உள்ளது. மேலும், டாப் வேரியண்ட்டில் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் மற்றும் ஸ்டெபிளிட்டி மேனேஜ்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன. இந்த வேரியண்ட் 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலிலும் மட்டும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்க விஷயம்.

வெளிப்புற அம்சங்கள்

வெளிப்புற அம்சங்கள்

அனைத்து வேரியண்ட்டுகளிலும் பாடி கலர் பம்பர் பொதுவான அம்சம். ஏ மற்றும் பி பில்லர்கள் கருப்பு வண்ணம் கொண்டவையாக இருக்கும். S வேரியண்ட் மற்றும் அதற்கு மேலான வேரியண்ட்டுகளில் பனி விளக்குகள் மற்றும் பின்புறத்திற்கான டீ ஃபாகர் நிரந்தர அம்சமாக இடம்பெற்றிருக்கும். SX மற்றும் அதற்கு மேற்பட்ட வேரியண்ட்டுகளில் டியூவல் வண்ண முன்பக்க கிரில் அமைப்பை கொண்டிருக்கும். S+ மற்றும் அதற்கு கீழான வேரியண்ட்டுகளில் கருப்பு நிற முகப்பு க்ரில் அமைப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. SX+ மற்றும் SX[O] வேரியண்ட்டுகளில் க்ரோம் ஹேண்டில்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.

அலாய் வீல்கள்

அலாய் வீல்கள்

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் SX[O] வேரியண்ட்டில் 17 இன்ச் டைமன்ட் கட் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அதே நேரத்தில், S+, SX மற்றும் SX+ ஆகிய வேரியண்ட்டுகளில் 16 இன்ச் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும். பேஸ் மாடல் மற்றும் S வேரியண்ட்டில் 16 இன்ச் ஸ்டீல் வீல்கள் பொருத்தப்பட்டிருக்கும். SX, SX+ மற்றும் SX[O] ஆகிய உயர் வேரியண்ட்டுகளில் புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், ரூப் ரேக், ரியர் வைப்பர் மற்றும் வாஷர் ஆகியவை இடம்பெற்றிருக்கும்.

 இன்டிரியர் அம்சங்கள்

இன்டிரியர் அம்சங்கள்

டில்ட் அட்ஜெஸ்ட்மென்ட் ஸ்டீயரிங் வீல், சென்ட்ரல் லாக்கிங், பவர் விண்டோஸ், ரியர் ஏசி வென்ட், டியூவல் ஹாரன் ஆகியவை அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் பொதுவான அம்சங்கள். S மற்றும் அதற்கு மேலான வேரியண்ட்டுகளில் ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை கூட்டிக் குறைக்கும் வசதி, எலக்ட்ரிக்கல் அட்ஜெஸ்ட் வசதி கொண்ட ரியர் வியூ கண்ணாடிகள், பின்புற இருக்கையில் சென்டர் ஆர்ம் ரெஸ்ட் ஆகியவை நிரந்தரமான வசதிகளாக இருக்கும். S+ மற்றும் அதற்கு மேலான வேரியண்ட்டுகளில் ரியர் பார்க்கிங் சென்சார், ரியர் பார்க்கிங் கேமரா, விபத்துக்களின்போது தானாக கதவுகள் திறக்கும் வசதி, ஸ்டார்ட் / ஸ்டாப் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கீ போன்றவை இடம்பெற்றிருக்கும். இது SX வேரியண்ட்டில் இருக்காது.

 க்ளைமேட் கன்ட்ரோல் வசதி

க்ளைமேட் கன்ட்ரோல் வசதி

புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியின் SX மற்றும் அதற்கு மேலான உயர் வேரியண்ட்டுகளில் க்ளைமேட் கன்ட்ரோல் மற்றும் தானாக மடங்கிக்கொள்ளும் ரியர் வியூ கண்ணாடிகள் உள்ளன. அனைத்து வேரியண்ட்டுகளிலும் சாதாரண அப்ஹோல்ஸ்டரியும், SX[O] டாப் வேரியண்ட்டில் செயற்கை லெதர் சூழப்பட்ட அப்ஹோல்ஸ்டரி, இருக்கைகள், ஸ்டீயரிங் வீல் மற்றும் கியர் லிவர் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கும்.

ஆடியோ சிஸ்டம்

ஆடியோ சிஸ்டம்

பேஸ் மாடலில் சிடி ப்ளேயர், யுஸ்பி, ஆக்ஸ் போர்ட், 4 ஸ்பீக்கர்கள் கொண்ட 2 டின் ஆடியோ சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. S மற்றும் SX வேரியண்ட்டுகளில் 5 இன்ச் டச்ஸ்கீரீன் ஆடியோ சிஸ்டமும், S+, SX+ மற்றும் SX[O] ஆகிய வேரியண்ட்டுகளில் 7 இன்ச் டச் ஸ்கிரீன் சிஸ்டம் மற்றும் நேவிகேஷன் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கிறது. இதன் ஆடியோ சிஸ்டத்துடன் 4 ஸ்பீக்கர்கள் மற்றும் 2 ட்வீட்டர்கள் இணைக்கப்பட்டிருக்கின்றன. ஸ்டீயரிங் வீலில் புளுடூத் மற்றும் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள் இடம்பெற்றிருக்கும்.

வண்ணங்கள்

வண்ணங்கள்

ஸ்லீக் சில்வர், ஸ்டார் டஸ்ட், பியர்ல் பீஜ், போலார் ஒயிட், ரெட் பேஸன், மிஸ்டிக் புளூ மற்றும் ஃபேன்டம் பிளாக் ஆகிய 7 வண்ணங்களில் புதிய ஹூண்டாய் க்ரெட்டா எஸ்யூவியை தேர்வு செய்து கொள்ள முடியும்.

Source: Team BHP

Most Read Articles
English summary
All new Hyundai Creta suv's variant wise details leaked in internet.
Story first published: Monday, July 13, 2015, 13:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X