புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ்... படங்களுடன் ஓர் முன்னோட்டம்

By Saravana

ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் நாளை விற்பனைக்கு வர இருக்கும் நிலையில், அந்த காரின் அதிகாரப்பூர்வ படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த காரில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்களை 25 படங்களுடன் இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம்.

மேலும், ஹூண்டாய் எலைட் ஐ20 காரிலிருந்து இந்த கார் எவ்வாறு வேறுபடுத்தப்பட்டிருக்கிறது என்பதை எளிதாக அறிந்துகொள்ளும் வகையில், இந்த செய்தித் தொகுப்பு அமைகிறது.

மாற்றங்கள் என்னென்ன?

மாற்றங்கள் என்னென்ன?

இந்த காரில் நிகழ்ந்திருக்கும் புதிய மாற்றங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை படங்களுடன் ஸ்லைடரில் விளக்கியுள்ளோம்.

முன்பக்க தோற்றம்

முன்பக்க தோற்றம்

முகப்பில் க்ரில் அமைப்பு, பம்பர் மற்றும் இதர மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பின்னால் வரும் ஸ்லைடுகளில் கூடுதல் விபரங்களை தனித்தனியாக காணலாம்.

பின்புறத் தோற்றம்

பின்புறத் தோற்றம்

டெயில்லைட் க்ளஸ்ட்டரில் மாற்றம் இல்லை. ஆனால் பம்பர் டிசைன் மாறுதல் செய்யப்பட்டிரு்ககிறது. கூடுதல் தகவல்களை பின்னால் வரும் ஸ்லைடுகளில் தனியாக காணலாம்.

பக்கவாட்டுத் தோற்றம்

பக்கவாட்டுத் தோற்றம்

பக்கவாட்டில் பாடி கிளாடிங், ரூஃப் ரெயில்கள், ரியர் ஸ்பாய்லர் ஆகியவை இதனை வேறுபடுத்துகிறது. அலாய் வீல் டிசைனும் புதிது.

க்ரில் அமைப்பு

க்ரில் அமைப்பு

க்ரில் அமைப்பு முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. பம்பர் பெரிய அளவில் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஸ்கிட் பிளேட் மற்றும் தேன்கூடு வடிவ க்ரில் அமைப்புடன் கூடிய ஏர்டேம் ஆகியவை பம்பருடன் ஒருங்கிணைத்து டிசைன் செய்யப்பட்டிருக்கிறது.

 பின்புற பம்பர்

பின்புற பம்பர்

டெயில் லைட் க்ளஸ்ட்டரில் மாற்றம் இல்லை என்பது தெரிந்துவிட்டது. ஆனால், பம்பர் டிசைனில் அதிக மாற்றங்கள் செய்துள்ளனர். காரை சுற்றிலும் வரும்பாடி கிளாடிங்குடன் ஸ்கிட் பிளேட் மற்றும் பம்பர் இயைந்து நிற்கின்றன. வட்ட வடிவ பார்க்கிங் லேம்ப் வித்தியாசப்படுகிறது.

அலாய் வீல்

அலாய் வீல்

இந்த காரில் கிரவுண்ட் கிளியரன்ஸ் கூட்டவேண்டும் என்பதற்காக 16 இஞ்ச் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. மேலும், அலாய் வீல் டிசைனும் புதிது.

ஹெட்லைட்

ஹெட்லைட்

புரொஜெக்டர் ஹெட்லைட் மற்றும் எல்இடி பகல்நேர விளக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பனி விளக்கு டிசைன்

பனி விளக்கு டிசைன்

எலைட் ஐ20 காரில் நீளவாக்கிலான பனி விளக்குகள் இருக்கும் நிலையில், இந்த காரில் வட்ட வடிவ பனி விளக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

டெயில் லைட்

டெயில் லைட்

டெயில் லைட் க்ளஸ்ட்டரில் எந்த மாற்றமும் இல்லை. ஏனெனில், எலைட் ஐ20 காரின் டிசைனை பன்மடங்கு மேலே உயர்த்தியதற்கு காரணம் இந்த டெயில் லைட் டிசைன்தான். எனவே, இந்த டெயில் லைட் க்ளஸ்ட்டரில் முன் எச்சரிக்கையாக ஹூண்டாய் எஞ்சினியர்கள் கை வைக்கவில்லை.

 அப்போலோ டயர்

அப்போலோ டயர்

அப்போலோ டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன.

ரியர் வியூ மிரர்

ரியர் வியூ மிரர்

ரியர் வியூ கண்ணாடி இரட்டை வண்ணத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது.

பெட்ரோல் டேங்க் மூடி

பெட்ரோல் டேங்க் மூடி

பெட்ரோல் டேங் மூடி டிசைன் மிகவும் வித்தியாசமாக இருப்பதுடன், அலுமினிய வண்ண ஃபினிஷ் செய்யப்பட்டிருக்கிறது.

இன்டிரியர்

இன்டிரியர்

எலைட் ஐ20 காருக்கும் ஐ20 ஆக்டிவ் காருக்கும் இன்டிரியர் டிசைனில் பெரிய வித்தியாசங்கள் இல்லை. ஆனால், புதிய ஐ20 கார் இருவிதமான இன்டிரியர் வண்ணக் கலவை கொண்டதாக வர இருக்கிறது.

இன்டிரியர் -1

இன்டிரியர் -1

ஆரஞ்ச் மற்றும் கருப்பு வண்ணக் கலவையிலான ஒரு இன்டிரியர் ஆப்ஷன் வருகிறது.

இன்டிரியர்- 2

இன்டிரியர்- 2

நீலம் மற்றும் கருப்பு வண்ணக் கலவையிலான மற்றொரு இன்டிரியர் வண்ணத்தில் கிடைக்கிறது. இந்த வண்ணக் கலவை இன்டிரியர் வெளிப்புறத்தில் சில்வர் வண்ணத்திலான ஐ20 ஆக்டிவ் காரில் மட்டுமே கிடைக்கும்.

சென்டர் கன்சோல்

சென்டர் கன்சோல்

எலைட் ஐ20 காருக்கும் இதற்கும் சென்டர் கன்சோல் டிசைனில் மாற்றங்கள் இல்லை.

முன் இருக்கை

முன் இருக்கை

ஆரஞ்ச் மற்றும் கருப்பு வண்ணக் கலவையிலான இருக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பின் இருக்கை

பின் இருக்கை

பின்புற இருக்கைகளும் இரு வண்ணக் கலவையிலேயே இருப்பது வித்தியாசப்படுத்தும் அம்சமாக இருக்கிறது.

கேபின் இடவசதி

கேபின் இடவசதி

கேபின் இடவசதி கண்டிப்பாக படத்தில் இருப்பது போன்று இருக்காது.

பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் எஞ்சின்

பெட்ரோல் மாடலில் 82 பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வழங்கும் 1197 சிசி எஞ்சின் இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

 டீசல் மாடல்

டீசல் மாடல்

டீசல் மாடலில் 89 பிஎச்பி பவரையும், 220 என்எம் டார்க்கையும் வழங்கும் 1396சிசி டீசல் எஞ்சின் இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

மைலேஜ் -பெட்ரோல்

மைலேஜ் -பெட்ரோல்

பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 17.19 கிமீ மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

மைலேஜ் - டீசல்

மைலேஜ் - டீசல்

டீசல் மாடல் லிட்டருக்கு 21.19 கிமீ மைலேஜை வழங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

நாளை ரிலீஸ்

நாளை ரிலீஸ்

புதிய ஹூண்டாய் ஐ20 ஆக்டிவ் கார் நாளை விற்பனைக்கு வருகிறது. ரூ.6.50 லட்சம் ஆரம்ப விலையில் இந்த கார் விற்பனைக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும் நிலையில், இந்த காரின் அதிகாரப்பூர்வ தகவல்களை டிரைவ்ஸ்பார்க் தளத்தில் நாளை காணலாம்.

Most Read Articles
English summary

 South-Korean automobile manufacturer will be launching its i20 Active on 17th March, 2015. This vehicle has been spied several times on Indian roads and will be finally launched. 
Story first published: Monday, March 16, 2015, 12:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X