டாடா ஸீக்கா ஹேட்ச்பேக் காரின் படங்கள் லீக்கானது... பேஷ், பேஷ், டிசைன் ரொம்ப நன்னாருக்கு

By Saravana

ஹரிசான் நெக்ஸ்ட் விற்பனை கொள்கையில் டாடா மோட்டார்ஸ் அடுத்து வெளியிட இருக்கும் தயாரிப்பு டாடா ஸீக்கா என்ற புதிய ஹேட்ச்பேக் கார் மாடல். ரூ.4 லட்ச ரூபாயில் வரும் என்ற தகவல்கள் இந்த காரின் மீதான அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதுவரை கைட் என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த காரின் ஸ்பை படங்கள் ஆட்டோமொபைல் தளங்களில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வந்தன. இந்த நிலையில், முதல்முறையாக டாடா ஸீக்கா காரின் தயாரிப்பு நிலை மாடலின் படங்கள் ஆட்டோமொபைல் இணையதளம் ஒன்றில் வெளியாகியிருக்கிறது.

புதிய டிசைன்

புதிய டிசைன்

டாடா இவி2 காரின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், ஓர் புத்தம் புதிய மாடலாகவே தோற்றமளிப்பதுடன், டிசைனும் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. டாடா ஸெஸ்ட், போல்ட் கார்களுக்கு அடுத்து சிறப்பான டிசைன் கொண்ட கார் மாடலாக இருக்கிறது டாடா ஸீக்கா.

டிசைன் அம்சங்கள்

டிசைன் அம்சங்கள்

முன்புறத்தில் தேன்கூடு வடிவ க்ரில் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. ஹெட்லைட் டிசைன் நவீனத்துவத்துடன் இருக்கிறது. குரோம் வளையத்துடன் பனி விளக்கு வசீகரிக்கிறது. பி பில்லர் கருப்பு நிறம் கொடுக்கப்பட்டிருப்பதுடன், இன்டிகேட்டர்கள் கொண்ட சைடு மிரர்கள் இடம்பெற்ரிருக்கிறது. பின்புறத்தில் இலை போன்ற டெயில் லைட் க்ளஸ்ட்டர் மிகச்சிறப்பாக வடிவம் பெற்றிருக்கிறது.

இன்டீரியர்

இன்டீரியர்

உட்புறத்தில் பீஜ் மற்றும் கருப்பு வண்ணத்திலான இரட்டை வண்ணக் கலவையில் ஃபினிஷிங் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த காரில் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் வருவதையும் நீங்கள் மனதில் இறுத்த வேண்டிய விஷயம்.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் இடம்பெறுகிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக வருகிறது.

அறிமுகம்

அறிமுகம்

வருகிற 1ந் தேதி இந்த காரை கோவாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் வைத்து டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருப்பதாக ஸ்பை படங்களை வெளியிட்டிருக்கும் ஆட்டோஸ் அரேனா தளம் தெரிவித்துள்ளது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை எமக்கு கிடைக்கவில்லை. அதேநேரத்தில், பிற கார் நிறுவனங்கள் போன்று கோவாவில் மீடியா டிரைவ் நிகழ்ச்சி நடத்தப்படும் என்று தெரிகிறது. அதைத்தொடர்ந்து, ஜனவரியில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Source

Most Read Articles
English summary
New Tata Zica Production Version Images Leaked.
Story first published: Saturday, November 28, 2015, 12:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X