நான் போர்ஷேங்க... தம்பி, அப்படி ஓரமா போய் நில்லு... வருகிறது உலகின் அதிவேக டெஸ்லா எஸ்யூவி!

எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் புகழ்பெற்ற அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம், அடுத்ததாக சக்திவாய்ந்த ஓர் எலக்ட்ரிக் எஸ்யூவி மாடலை களமிறக்குகிறது. டெஸ்லா மாடல் எக்ஸ் என்று அழைக்கப்படும் இந்த புதிய எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல்தான் உலகின் அதிவேக எஸ்யூவி மாடல் என்ற பெருமையை பெற இருக்கிறது.

அதாவது, போர்ஷே கேயென் டர்போ எஸ் காரையே அப்படி ஓரமாக போய் நில்லு என்று சொல்லும் அளவுக்கு இதன் பெர்ஃபார்மென்ஸும், டாப் ஸ்பீடும் இருக்குமாம். பெட்ரோல் எஸ்யூவி மாடல்களையே ஓரங்கட்டும் அளவுக்கு செயல்திறன் கொண்ட இந்த எலக்ட்ரிக் எஸ்யூவியில் அப்படி என்னதான் இருக்கிறது. பார்த்துவிடுவோம் வாருங்கள்.

பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

உலகின் பிரபல எலக்ட்ரிக் செடான் கார் மாடலான டெஸ்லா மாடல் எஸ் காரின் அடிப்படையிலேயே இந்த புதிய எஸ்யூவி உருவாக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதன் 60 பாகங்களை டெஸ்லா மாடல் எக்ஸ் எஸ்யூவி பகிர்ந்து கொண்டிருக்கும். மேலும், மாடல் எஸ் காரைவிடை இந்த எஸ்யூவி 10 சதவீதம் கூடுதல் எடை கொண்டதாக இருக்கும். ஆனால், செயல்திறன்...

செயல்திறன்

செயல்திறன்

இந்த காரில் 90kWh திறன் கொண்ட இரண்டு லித்தியம் அயான் பேட்டரிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த பேட்டரிகளும், செயல்திறன் மிக்க மின்மோட்டார்களின் மூலமாக இந்த எஸ்யூவி 0 - 97 கிமீ வேகத்தை வெறும் 3.1 வினாடிகளில் எட்டிவிடுமாம். மேலும், இதன் டாப் ஸ்பீடும் வியக்க வைக்கும் என்கின்றனர். அதாவது, இன்னும் சோதனை நடத்தப்படவில்லை. ஆனால், இந்த இலக்கை கண்டிப்பாக தனது மாடல் எட்டும் என்று டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம்

முன்புற சக்கரங்களுக்கு ஒரு மின் மோட்டாரும், பின்புற சக்கரங்களுக்கு ஒரு மின் மோட்டாரும் சக்தியை வழங்கும். இது பிரத்யேகமான ஆல் வீல் டிரைவ் சிஸ்டமாக டெஸ்லா தெரிவிக்கிறது.

'கல் விங்' கதவுகள்

'கல் விங்' கதவுகள்

இந்த காரின் கதவுகள் மேல் நோக்கி திறக்கும் Gull Wing வகை கதவுகளாக இருக்கும். இதனை ஃபால்கன் டோர்ஸ் என்ற பெயரில் அழைக்கிறது டெஸ்லா.

ரேஞ்ச்

ரேஞ்ச்

ஒருமுறை சார்ஜ் செய்தால் 270 கிமீ முதல் 365 கிமீ தூரம் வரை பயணிக்கும் வல்லமை கொண்டதாக இருக்கும் இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல்.

 இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த எஸ்யூவியில் 7 பேர் அமர்ந்து பயணிப்பதற்கான இருக்கை வசதி இருக்கும். மேலும், முன்புறத்திலும், பின்புறத்திலும் பொருட்களை வைப்பதற்கான இரட்டை பூட் ரூம் வசதி கொண்டதாக வருகிறது.

 முன்பதிவு

முன்பதிவு

கடந்த 2012ம் ஆண்டு முதல் இந்த எஸ்யூவிக்கு முன்பதிவு நடந்து வருகிறது. இதுவரை 20,000க்கும் அதிகமானோர் முன்பதிவு செய்து காத்திருக்கின்றனர். சாதாரண மாடலுக்கு 5,000 டாலர் முன்பணமாகவும், சிக்னேச்சர் மாடலுக்கு 40,000 டாலர் முன்பணமாகவும் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 டெலிவிரி

டெலிவிரி

பலமுறை தள்ளிபோடப்பட்ட இந்த எஸ்யூவியின் விற்பனை தேதியை ஒருவழியாக எலன் மஸ்க் அறிவித்துள்ளார். வரும் செப்டம்பர் முதல் இந்த புதிய எஸ்யூவியின் டெலிவிரி துவங்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

குட் நியூஸ்

குட் நியூஸ்

அடுத்த ஓர் ஆண்டில் இந்த எஸ்யூவியின் வலது பக்க ஸ்டீயரிங் வீல் கொண்ட மாடலும் அறிமுகம் செய்யப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இதனால், இந்தியா உள்ளிட்ட நாடுகளிலும் எதிர்காலத்தில் இந்த எஸ்யூவி வருவதற்கான வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
The Tesla Model X has yet to be tested, Musk said that a 0-60 time in seconds of “3.3-ish” could be expected, making it the fastest SUV on sale. A Porsche Cayenne Turbo S will get from 0-62mph in 4.1 seconds.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X