இந்தியாவில் விற்பனைக்கு வந்தது புதிய வால்வோ எக்ஸ்சி90 சொகுசு எஸ்யூவி - முழு விபரம்!

By Saravana

இந்தியாவில் புதிய வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டீலர்களில் ஏற்கனவே முன்பதிவு துவங்கிவிட்ட நிலையில், அதிகாரப்பூர்வமாக விலை உள்ளிட்ட விபரங்கள் இன்று வெளியிடப்பட்டன.

இரண்டாம் தலைமுறை மாடலாக வெளிவந்திருக்கும் புதிய வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறு. இரண்டு விதமான மாடல்களில் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கும். கூடுதல் விபரங்கள், படங்களை ஸ்லைடரில் காணலாம்.

டிசைன்

டிசைன்

புதிய வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி எஸ்பிஏ (Scalable Platform Architecture) எனப்படும் மோடுலர் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருக்கிறது. முந்தைய மாடலைவிட டிசைனில் பல்வேறு விதத்திலும் சிறப்பாக வந்திருக்கிறது. சுத்தியல் போன்ற அமைப்புடைய எல்இடி பகல்நேர ரன்னிங் விளக்குகள், எல்இடி ஹெட்லைட்டுகள், புதிய க்ரில் அமைப்பு ஆகியவை மிகவும் வசீகரமாகவும், கம்பீரமாகவும் இருக்கிறது.

பின்புறத் தோற்றம்

பின்புறத் தோற்றம்

பின்புறத் தோற்றத்திற்கு சிறப்பு சேர்க்கும் டெயில் லைட் க்ளஸ்ட்டர் டிசைனும், ஒருங்கிணைந்த ரூஃப் ஸ்பாய்லரும் கவர்ச்சியை தருகிறது. பின்புற பம்பரின் கீழ்பாகத்தில் அலுமினிய வண்ண ஃபினிஷிங்கும், அதன் இருமருங்கிலும் புகைப் போக்கி குழாய்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 19 அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டிருப்பதுடன், 20 இன்ச் அலாய் ரிம்களை ஆப்ஷனலாக பெற்றுக் கொள்ளலாம்.

 வடிவம்

வடிவம்

புதிய வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவி 4,950மிமீ நீளமும், 2008மிமீ அகலமும், 1,776மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல்பேஸ் 2,984மிமீ என்பதால் மிக சிறப்பான இடவசதியை வழங்கும்.

 எஞ்சின்

எஞ்சின்

புதிய வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியில் 225 எச்பி பவரையும், 470 என்எம் டார்க்கையும் அதிகபட்சமாக வழங்க வல்ல, 2.0 லிட்டர் ட்வின் டர்போ டீசல் எஞ்சின் உள்ளது. 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருப்பதுடன், ஆல் வீல் டிரைவ் சிஸ்டமும் உள்ளது. மணிக்கு 230 கிமீ டாப்ஸ்பீடு கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 உள்பக்க வடிவமைப்பு

உள்பக்க வடிவமைப்பு

மரவேலைப்பாடுகளும், உயர்தர லெதரால் ஃபினிஷ் செய்யப்பட்டு மிக ஆடம்பரமாக காட்சி தருகிறது. டியூவல் டோன் எனப்படும் இரட்டை வண்ணத்தில் உள்பக்கம் ஃபினிஷ் செய்யப்பட்டுடள்ளது. 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல், 12.3 இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 4 ஸோன் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் போன்றவை குறிப்பிடத்தக்கவை. வால்வோ சென்சஸ் சாஃப்ட்வேர் கொண்ட 9 இன்ச் திரையுடன் கூடிய டேப்லெட் சென்டர் கன்சோலில் பொருத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம், நேவிகேஷன், மியூசிக் சிஸ்டம், போன் அழைப்புகளை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை பெறலாம்.

இதர வசதிகள்

இதர வசதிகள்

கீ லெஸ் என்ட்ரி, பானரோமிக் சன்ரூஃப், ஹெட்அப் டிஸ்ப்ளே, ஹீட் வென்டிலேட்டட் இருக்கைகள், 19 ஸ்பீக்கள் கொண்ட 1400வாட் போவர்ஸ் அண்ட் வில்கின்ஸ் மியூசிக் சிஸ்டம் ஆகியவை முக்கியமானதாக இருக்கின்றன.

 பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்குகள், விப்பிளாஷ் புரொடெக்ஷன், டிராக்ஷன் கன்ட்ரோல் போன்றவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்றிருக்கிறது. இந்தியாவில் ரேடார் பயன்படுத்துவதற்கு தடை இருப்பதால், வெளிநாடுகளில் வழங்கப்படும் சில ரேடார் அடிப்படையிலான பாதுகாப்பு வசதிகளை தற்போது வழங்க இயலாது என்றும், இந்திய அரசு இந்த கட்டுப்பாடுகளை தளர்த்தினால், இந்த வசதிகளை வாடிக்கையாளர்கள் பெற முடியும் என்று வால்வோ தெரிவித்துள்ளது.

விலை

விலை

புதிய வால்வோ எக்ஸ்சி90 எஸ்யூவியின் மொமன்டம் என்ற பேஸ் மாடல் ரூ.64.9 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையிலும், இன்ஸ்க்ரிப்ஷன் எனப்படும் டாப் வேரியண்ட் ரூ.77.9 லட்சம் மும்பை எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

Most Read Articles
English summary
Volvo Cars India has launched the New XC90 luxury SUV in India at a starting price of Rs 64.9 lakh for the Momentum trim. The top Inscription trim is priced at Rs 77.9 lakh (all prices, ex-showroom, Mumbai without Octroi)
Story first published: Tuesday, May 12, 2015, 18:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X