டெல்லி ரேஸ் டிராக்கில் பட்டையை கிளப்பிய நிசான் பேட்ரோல் எஸ்யூவி!

By Saravana

இந்திய சந்தையில் கால் பதித்து 10 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதத்தில், நிசான் கார்னிவல் என்ற நிகழ்ச்சியை டெல்லி அருகேயுள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் நிசான் நடத்தியது.

கடந்த மூன்று நாட்களாக நடந்த இந்த நிகழ்ச்சியில் நிசான் நிறுவனத்தின் சிறப்பு அழைப்பின் பேரில் வந்த வாடிக்கையாளர்கள், ஆட்டோமொபைல் பிரியர்கள் அனைத்து நிசான் கார்களையும் டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியின் ஹைலைட்டான விஷயம் நிசான் பேட்ரோல் மற்றும் லீஃப் எலக்ட்ரிக் கார்கள் வந்திருந்ததுதான். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

டெஸ்ட் டிரைவ்

டெஸ்ட் டிரைவ்

வந்திருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஆட்டோமொபைல் பிரியர்கள் நிசான் சன்னி, மைக்ரா, டெரானோ, பேட்ரோல், லீஃப் எலக்ட்ரிக் கார்களை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பை பெற்றனர்.

ஆஃப் ரோடு டிராக்

ஆஃப் ரோடு டிராக்

புத் இன்டர்நேஷனல் சர்க்யூட்டில் அமைக்கப்பட்டிருந்த ஆஃப் ரோடு டிராக்கில் நிசான் எஸ்யூவி மாடல்களை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில், பேட்ரோல், டெரானோ எஸ்யூவிகளின் பராக்கிரமங்களை சோதனை செய்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

பயிற்றுனர்கள்

பயிற்றுனர்கள்

நிசான் எஸ்யூவிகளை ஆஃப்ரோடு டிராக்கில் ஓட்டுவதற்கு ஏதுவாக பயிற்றுனர்கள் உதவி செய்தனர்.

 நிசான் பேட்ரோல்

நிசான் பேட்ரோல்

நிசான் பேட்ரோல் சொகுசு எஸ்யூவி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அந்த எஸ்யூவியை முதல்முறையாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்திருந்தது நிசான்.

ஒரு கோடி விலை

ஒரு கோடி விலை

நிசான் பேட்ரோல் எஸ்யூவியில் பொருத்தப்பட்டிருக்கும் வி8 எஞ்சினின் பராக்கிரமங்களை ஆஃப்ரோடு டிராக்கில் வைத்து சோதனை செய்ய ஏதுவான நிகழ்வாகவும் இது அமைந்தது. இந்த எஸ்யூவி ஒரு கோடி ரூபாய் விலையில் வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

 லீஃப்

லீஃப்

சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காத நிசான் லீஃப் எலக்ட்ரிக் காரையும் ஓட்டிப் பார்க்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. இதன் பவரும், ரோடு கிரிப்பும் சிறப்பாக இருந்தது.

இதர மாடல்கள்

இதர மாடல்கள்

ஓட்டுனரின் திறன்களை சோதித்து பார்க்கும் விதத்தில், நிசான் சன்னி காரை குறிப்பிட்ட வழித்தடத்தில் ஓட்டுவதற்கான வாய்ப்பையும் நிசான் ஏற்பாடு செய்திருந்தது. இதுதவிர, மைக்ரா காரும் டெஸ்ட் டிரைவ் நிகழ்ச்சியில் இடம்பெற்றது.

தொழில்நுட்பங்கள்

தொழில்நுட்பங்கள்

நிசான் நிறுவனத்தின் கார்களை தவிர்த்து நிசான் எக்ஸ்ட்ரோனிக் டிரான்ஸ்மிஷன், ப்யூர் டிரைவ் மற்றும் அரவுண்ட் வியூ மானிட்டர் ஆகிய தொழில்நுட்பங்களின் சிறப்புகளை பார்க்கும் விதத்திலும் நிகழ்ச்சி அமைந்தது.

Most Read Articles
English summary
Nissan CARnival 2015 was held at Buddh International Circuit at Greater Noida. 2015 CARnival by Nissan was their first drive experience for customers & enthusiasts.
Story first published: Monday, March 23, 2015, 19:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X