புதிய தலைமுறை சிவிடி கியர்பாக்ஸுடன் நிசான் மைக்ரா கார்.. ஃபர்ஸ்ட் டிரைவ் அனுபவம்!

By Saravana

இந்தியாவில் நிசான் மைக்ரா கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைவதை கொண்டாடும் விதத்தில், மேம்படுத்தப்பட்ட சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு இன்று அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த வாரம் சென்னையில் நடந்த நிசான் ஜிடி அகடமி போட்டியின்போதே இந்த புதிய மைக்ரா மாடல் பத்திரிக்கையாளர் முன்னிலையில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், சென்னை, இருங்காட்டுகோட்டையில் அமைந்திருக்கும் மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் ரேஸ் டிராக்கில் இந்த காரை டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பையும் நிசான் வழங்கியது.

இந்த காரில் இடம்பெற்றிருக்கும் சிறப்புகள், அந்த குட்டி டெஸ்ட் டிரைவ் அனுபவங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம்.

மைக்ரா எக்ஸ்-ஷிஃப்ட்

மைக்ரா எக்ஸ்-ஷிஃப்ட்

நிசான் மைக்ராவில் மேம்படுத்தப்பட்ட புதிய தலைமுறை சிவிடி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு வந்திருக்கிறது. இந்த புதிய மாடலை மைக்ரா எக்ஸ்- ஷிஃப்ட் என்ற பெயரில் இன்று நிசான் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இந்த மாடல் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட மாடலில் வந்திருக்கிறது.

மென்மையான அனுபவம்

மென்மையான அனுபவம்

இந்த புதிய மாடலை மெட்ராஸ் மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப் ரேஸ் டிராக்கில் ஓட்டி பார்த்தபோது, வளைவுகளில் லேசான பாடி ரோல் இருப்பதை உணர முடிந்தது. ஆனால், அதனை கண்டுணர்ந்து கட்டுப்படுத்தக்கூடிய அளவிலேயே இருக்கிறது.

நகர பயன்பாடு

நகர பயன்பாடு

நிசான் நிறுவனம் காரில் ஏறுவதற்கு முன்பே, இது மிகவும் மென்மையான ஓட்டுதல் அனுபவத்தை தரும். கியர் ஷிஃப்டின்போது ஜர்க் இருக்காது என்று கூறியது. அது உண்மையென்பது ஓட்டும்போது உணர முடிந்தது. குறிப்பாக, நகர்ப்புறத்தில் ஓட்டுபவர்களுக்கு மிகச்சிறப்பான சாய்ஸாக கூறலாம். பிரேக்கின் செயல்பாடும் மிகவும் திருப்திகரமாகவும், நம்பிக்கையளிப்பதாகவும் இருக்கிறது.

பிக்கப்

பிக்கப்

ஆக்சிலரேட்டரை குறைத்து மீண்டும் கொடுக்கும்போது எதிர்பார்த்த அளவு செயல்திறனை காட்டவில்லை. இது புதிய தலைமுறை சிவிடி மாடலில் சிறிது ஏமாற்றத்தை அளிக்கும் விஷயமாக இருந்தது. அதேவேளை, மைலேஜில் சிறப்பான மாடலாகவும் இருக்கும் என்பதோடு, ஓட்டுதல் சுகத்தை வழங்குவதில் சிறப்பான மாடலாகவே இருக்கிறது நிசான் மைக்ரா எக்ஸ்- ஷிஃப்ட் கார்.

மைலேஜ்

மைலேஜ்

நிசான் மைக்ரா எக்ஸ்- ஷிஃப்ட் கார் லிட்டருக்கு 19.34 கிமீ மைலேஜை தரும் என்று நிசான் நிறுவனம் தெரிவிக்கிறது. இதேபோன்று, பெட்ரோல் மாடலின் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 18.44 கிமீ மைலேஜை தரும் என்று தெரிவிக்கப்பட்டது.

நிசான் எக்ஸ்- ஷிஃப்ட் சிறப்பம்சங்கள்

நிசான் எக்ஸ்- ஷிஃப்ட் சிறப்பம்சங்கள்

புதிய தலைமுறை சிவிடி கியர்பாக்ஸ் தவிர்த்து, இந்த காரில் ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட், டோர் கிராஃபிக் ஸ்டிக்கர்கள், ரூஃப் ரேப், மிதியடிகள், எல்இடி ஸ்கஃப் பிளேட்டுகள், பியானோ பிளாக் இன்டிரியர் மற்றும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் போன்றவை நிரந்தர அம்சங்களாக இடம்பெற்றிருக்கின்றன.

விலை விபரம்

விலை விபரம்

புதிய நிசான் மைக்ரா சிவிடி எக்ஸ்- ஷிப்ட் காரின் எக்ஸ்எல் வேரியண்ட் ரூ.6,39,900 டெல்லி எக்ஸ்ஷோரும் விலையிலும், எக்ஸ்வி டாப் வேரியண்ட் ரூ.7,04,600 எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும்.

Most Read Articles
English summary
The new Nissan Micra X-Shift was launched in the country today, at a price of INR lakh. We were invited by Nissan to test drive the new CVT variant on the MMSCI circuit in Chennai, during the Nissan GT Academy event. The X-Shift comes with new features and an improved version of the CVT transmission.
Story first published: Tuesday, July 7, 2015, 14:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X