நிசான் எக்ஸ் ட்ரெயில் எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடல் இந்தியா வருகிறது!

By Saravana

நிசான் எக்ஸ் ட்ரெயில் எஸ்யூவியின் புதிய தலைமுறை மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

2004ம் ஆண்டு முதல் தலைமுறை மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. விற்பனையில் போதிய பங்களிப்பை வழங்காததால், கடந்த ஆண்டு எக்ஸ்- ட்ரெயில் எஸ்யூவியின் விற்பனையை நிசான் இந்தியா நிறுவனம் முற்றுப்புள்ளி வைத்தது.

இந்த நிலையில், வடிவமைப்பிலும், வசதிகளிலும் தலைமுறை மாற்றங்களுடன் வருகை தர இருக்கும் புதிய தலைமுறை நிசான் எக்ஸ் ட்ரெயில் அடுத்த சில மாதங்களில் இந்திய மண்ணில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

புதிய மாடல்

புதிய மாடல்

கடந்த 2013ம் ஆண்டு பிராங்க்ஃபர்ட் ஆட்டோமொபைல் கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட மூன்றாம் தலைமுறை நிசான் எக்ஸ் ட்ரெயில் எஸ்யூவிதான் விரைவில் இந்தியா வர இருக்கிறது. நிசான்- ரெனோ நிறுவனங்களின் கூட்டணியின் Common module Family(CMF) பிளாட்ஃபார்மில் இந்த புதிய மாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது. முந்தைய தலைமுறை மாடலைவிட வடிவமைப்பில் பல விதங்களில் முன்னேறியிருப்பதுடன், வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும் அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

புதிய நிசான் எக்ஸ் ட்ரெயில் எஸ்யூவி 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் கொண்ட மாடலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எஞ்சினுடன் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டதாக கிடைக்கும்.

சிறப்பம்சங்கள்

சிறப்பம்சங்கள்

புதிய நிசான் எக்ஸ் ட்ரெயில் எஸ்யூவியில், புரொஜெக்டர் ஹெட்லைட்ஸ், டியூவல் ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், க்ரூஸ் கன்ட்ரோல், 7 இன்ச் தொடுதிரையுடன் கூடிய புதிய தலைமுறை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், சாலை நிலையை சென்சார்கள் மூலம் அறிந்துகொண்டு அதற்கேற்ப மாற்றிக்கொண்டு சிறப்பான பயண அனுபவத்தை வழங்கும் ஆக்டிவ் ரைடு கன்ட்ரோல் தொழில்நுட்பத்தில் செயல்படும் சஸ்பென்ஷன் அமைப்பு, எலக்ட்ரானிக் 4 வீல் டிரைவ் சிஸ்டம் போன்றவை முக்கியமானதாக இருக்கும்.

ஆன்ரோடு எஸ்யூவி

ஆன்ரோடு எஸ்யூவி

முந்தைய தலைமுறை மாடல் ஓர் சிறந்த ஆஃப்ரோடு எஸ்யூவி என்ற முழக்கத்துடன் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், புதிய தலைமுறை நிசான் எக்ஸ் ட்ரெயில் மாடலை ஓர் சிறந்த ஆன் ரோடு எஸ்யூவி மாடலாக குறிப்பிடுகின்றனர்.

7 சீட்டர்

7 சீட்டர்

நிசான் எக்ஸ் ட்ரெயில் எஸ்யூவியில் 7 பேர் அமர்ந்து செல்வதற்கான இருக்கைகளை பெற்றிருக்கும். மேலும், சிறப்பான இடவசதியையும் பயணிகளுக்கு அளிக்கும்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ.30 லட்சம் முதல் ரூ.36 லட்சம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் சான்டா ஃபீ, ஹோண்டா சிஆர்வி போன்ற மாடல்களுக்கு போட்டியை கொடுக்கும்.

Most Read Articles
English summary
According to reports, Japanese car maker Nissan is all set to launch the new generation X-Trail in India soon.
Story first published: Monday, August 17, 2015, 10:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X