டாடா மோட்டார்ஸ் கூட்டணியில் இந்தியாவில் கால் பதிக்க பீஜோ திட்டம்!

By Saravana

டாடா மோட்டார்ஸ் கூட்டணியில் இந்தியாவில் மீண்டும் கார் வர்த்தகத்தை துவங்குவதற்கு பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பீஜோ கார் நிறுவனம் திட்டமிட்டு இருக்கிறது.

மும்பையில் உள்ள டாடா மோட்டார்ஸ் தலைமையகமான பாம்பே ஹவுசில், டாடா மோட்டார்ஸ் உயரதிகாரிகளை பீஜோ நிர்வாகிகள் சமீபத்தில் சந்தித்து பேசியதும் இந்த கூட்டணிக்கான அச்சாரம் உருவாகிவிட்டதாகவே கருதப்படுகிறது. மேலும், இரு நிறுவனங்களுக்கும் இடையில் விரைவில் ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய ஆலை திட்டம் தோல்வி

புதிய ஆலை திட்டம் தோல்வி

கடந்த 2011ம் ஆண்டு குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையில் ரூ.4,000 கோடியில் புதிய கார் ஆலை கட்டுவதற்கு இந்த நிறுவனம் அடிக்கல் நாட்டியது. ஆனால், தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வந்த அந்த நிறுவனம், இந்தியாவில் புதிய ஆலை கட்டும் திட்டத்தை கைவிடுவதாக அறிவித்தது.

புதிய திட்டம்

புதிய திட்டம்

புதிய ஆலை கட்டுவதற்கு பெரும் முதலீடு செய்வது சாத்தியமில்லை என்பதை உணர்ந்து கொண்டுவிட்ட, பீஜோ நிறுவனம் தற்போது டாடா மோட்டார்ஸ் உதவியுடன் இந்தியாவில் கால் பதிக்க திட்டமிட்டிருக்கிறது. மேலும், உற்பத்தி, விற்பனை, சர்வீஸ் ஆகிய பணிகளை டாடா மோட்டார்ஸ் வசம் ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளது.

கார் உற்பத்தி

கார் உற்பத்தி

குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையில் உள்ள டாடா மோட்டார்ஸ் ஆலையில் பீஜோ கார்கள் உற்பத்தி செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதே ஆலையில்தான் டாடா நானோ கார் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

பீஜோ கார் மாடல்கள்

பீஜோ கார் மாடல்கள்

பீஜோ 308 செடான், பீஜோ 2008 க்ராஸ்ஓவர், பீஜோ 208 ஹேட்ச்பேக் ஆகிய கார் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புத்தம் புதிய கார் மாடல்களை தயாரித்து வெளியிடுவதை தவிர்க்கவும் பீஜோ முடிவு செய்துள்ளதாம்.

தொழில்நுட்ப பகிர்மானம்

தொழில்நுட்ப பகிர்மானம்

இரு நிறுவனங்களும் எஞ்சின் தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்ளவும் திட்டமிட்டிருக்கின்றன. இரு நிறுவனங்களும் இந்த கூட்டணியின் மூலம் பயன் பெறும் வகையில் ஒப்பந்தம் செய்யப்பட உள்ளது.

ஃபியட்டை தொடர்ந்து....

ஃபியட்டை தொடர்ந்து....

இத்தாலியை சேர்ந்த ஃபியட் கார் நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை டாடா மோட்டார்ஸ் கூட்டணியில் கார்களை உற்பத்தி செய்து, அதன் டீலர்ஷிப் வழியாகவே விற்பனை செய்தது.. இதேபாணியில், தற்போது பீஜோ கார் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் டீலர் நெட்வொர்க்கை பயன்படுத்தி கார் விற்பனையில் ஈடுபட முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
English summary
Peugeot plans to make a comeback in Indian market with Tata Motors as their partner. Currently, both automobile manufacturers are in talking terms and a decision is expected soon.
Story first published: Monday, October 5, 2015, 10:07 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X