லேண்ட்ரோவர் நிறுவனத்தின் முதல் குண்டு துளைக்காத எஸ்யூவி மாடல்!

By Saravana

குண்டு துளைக்காத அம்சங்கள் ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியின் படங்கள், விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. லேண்ட்ரோவர் நிறுவனத்தின் சிறப்பு வாகன வடிவமைப்பு பிரிவு இந்த காரை தயாரித்துள்ளது. மேலும், இதுதான் லேண்ட்ரோவரின் முதல் குண்டு துளைக்காத ரேஞ்ச்ரோவர் கார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ரேஞ்ச்ரோவர் சென்டினெல் என்ற பெயரில் வரும் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த எஸ்யூவி, வரும் 15 முதல் 18 வரையிலான தேதிகளில் லண்டனில் நடைபெறும் பாதுகாப்பு வாகனங்களுக்கான கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

அடிப்படை மாடல்

அடிப்படை மாடல்

ரேஞ்ச்ரோவர் எஸ்யூவியின் ஆட்டோபயோகிராஃபி மாடலின் அடிப்படையிலான குண்டு துளைக்காத அம்சங்கள் கொண்ட காராக உருவாக்கப்பட்டு இருக்கிறது.

பாதுகாப்பு சான்று

பாதுகாப்பு சான்று

இந்த கார் விஆர்8 பாதுகாப்பு தரத்துக்கு இணையானது என்ற சான்றை பெற்றிருக்கிறது. மேலும், 7.62 மிமீ அதிதிறன் கொண்ட துப்பாக்கி குண்டுகளின் தாக்குதல்களையும், கண்ணி வெடி தாக்குதல்களையும் சமாளிக்க வல்லது.

 இருக்கை வசதி

இருக்கை வசதி

இந்த எஸ்யூவியில் பாதுகாப்பாக 6 பேர் பயணிப்பதற்கான இருக்கைகள் உள்ளன. மேலும், அந்த இருக்கைகள் உயர்வகை ஸ்டீல் பின்புலத்துடன் கட்டமைக்கப்பட்டுள்ளன.

மாறுதல்கள்

மாறுதல்கள்

இந்த ரேஞ்ச்ரோவர் சென்டினெல் எஸ்யூவி மாடலின் டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், ரைடு ஸ்டெபிளிட்டி சிஸ்டம் மற்றும் சஸ்பென்ஷனில் மாறுதல்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அத்துடன் 650 கிலோ வரை எடை சுமக்கும் திறன் கொண்டது.

இதர அம்சங்கள்

இதர அம்சங்கள்

குண்டு வெடிப்பில் எரிபொருள் தொட்டியில் பாதிப்பு ஏற்பட்டால், தானாகவே சீலண்ட் மூலமாக துவாரங்கள் அடைபட்டு எரிபொருள் கசிவு ஏற்படாது. தீயணைப்பு தொழில்நுட்பம், அவசர காலத்தில் வெளியேறுவதற்கு பின்புறத்தில் அவசர கால வழி கொடுக்கப்பட்டு இருக்கிறது. பஞ்சர் ஆனாலும், காரை தொடர்ந்து செலுத்துவதற்கான ரன் ஃப்ளாட் டயர்கள், 20 இன்ச் அலாய் வீல்கள் உள்ளன.

 எஞ்சின்

எஞ்சின்

இந்த குண்டு துளைக்காத எஸ்யூவியை எளிதாக செலுத்துவதற்கு ஏதுவாக 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தியுள்ளனர். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 335 பிஎச்பி பவரை அளிக்க வல்லது. 8 ஸ்பீடு இசட்எஃப் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உள்ளது.

விலை மதிப்பு

விலை மதிப்பு

4 லட்சம் யூரோ விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டு ஆலையிலிருந்து ஆர்டரின்பேரில் மட்டுமே தயாரித்து விற்பனை செய்யப்படும்.

 ஓட்டுனர் பயிற்சி

ஓட்டுனர் பயிற்சி

இந்த குண்டு துளைக்காத வாகனத்தில் இருக்கும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகளை அவசர காலத்தில் எவ்வாறு கையாள வேண்டும் என்பதற்கும், ஓட்டுவதற்கும் சிறப்பு பயிற்சியை ஓட்டுனர்களுக்கு லேண்ட்ரோவர் வழங்கும்.

Most Read Articles
English summary
The Range Rover Sentinel has been presented by Land Rover's Special Vehicle Operations (SVO), which is the company's first armored vehicle.
Story first published: Tuesday, September 8, 2015, 17:10 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X