மாசு உமிழ்வு சோதனைகளில் ரெனோ கார் நிறுவனம் மோசடி : ஜெர்மன் அமைப்பு புகார்

By Ravichandran

ரெனோ நிறுவனம் மாசு உமிழ்வு சோதனைகளில் ஊழல் செய்திருப்பதாக ஜெர்மன் நாட்டு சுற்றுசூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஜெர்மனியில் இயங்கும் டியூஹெச் அல்லது டியுஷ் உம்வெல்தில்ஃப் என்ற பெயரில் இயங்கும் அமைப்பு தான், ரெனோ நிறுவனம் மாசு உமிழ்வு சோதனைகளில் ஊழல் செய்துள்ளது என குற்றம் சாட்டியுள்ளது.

டியூஹெச் மூலம் நியமிக்கபட்ட, ஸ்விட்சர்லாந்தின் பெர்ன் நகரத்தில் உள்ள யூனிவெர்சிட்டி ஆஃப் அப்லைட் சயின்சஸ் என்ற பல்கலைகழகம், ரெனோ நிறுவனத்தின் ஈஸ்பேஸ் மினிவேன் கொண்டு சோதனைகளில் ஈடுபட்டது. அப்போது, அந்த ரெனோ ஈஸ்பேஸ் மினிவேன், அதன் 1.6 லிட்டர் இஞ்ஜினில் இருந்து, ஒரு கிலோமிட்டருக்கு 2.06 கிராம்கள் என்ற அளவில் நைட்ரஸ் ஆக்ஸைட் வெளியிட்டு வந்தது.

இது சட்டபூர்வமாக அனுமதிக்கபட்ட அளவை காட்டிலும் 25 மடங்கு கூடுதாக உள்ளது என கூறபட்டது. ரெனோ ஈஸ்பேஸ் மினிவேன், 80 மில்லிகிராம் என்ற முறையாக அனுமதிக்கபட்ட மாசு உமிழ்வு அளவை, கூல்ட் இஞ்ஜின் மூலம் 'ஸ்பெசிஃபிக் பிரீகண்டீஷனிங்' என்ற நிலையில் தான் எட்ட முடிந்ததாக தெரிய வந்தது.

Renault Involved In Emissions Cheating says Deutsche Umwelthilfe Germany based Environmental Group

டியூஹெச் அமைப்பு மூலம் சுமத்தபட்ட இந்த குற்றசாட்டை, முறையாக கண்டுபிடிப்புகள் முறையாக நிராகரிக்கபட்டு எதிர்கொள்ளபட்டதாக தெரிகிறது.

முன்னதாக, மாசு உமிழ்வு சோதனைகளில் தேறுவதற்காக, ஃபோக்ஸ்வேகன் சில ஊழல்மிக்க மென்பொருட்களை உபயோகித்து சிக்கி கொண்டதால், உலக அளவில் இந்த பிரச்னை பூதாகரமாக பேசபட்டது குறிப்பிடதக்கது.

Most Read Articles
English summary
German Environmental Group, Deutsche Umwelthilfe has implicated Renault saying that, it is involved In Emissions Cheating. University of Applied Sciences in Bern, Switzerland, was commissioned by DUH and study was conducted, in which it is alleged that, Renault's Espace minivan was releasing up to 25 times excess Nitrous Oxide per Kilometre, over legal limits.
Story first published: Thursday, November 26, 2015, 15:08 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X