ரெனோ க்விட் கார் செப்டம்பரில் ரிலீஸ்... டீலர்களில் ரகசிய புக்கிங்!!

By Saravana

அடுத்த மாதம் ரெனோ க்விட் கார் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதனை உறுதி செய்யும் விதத்தில், சில ரெனோ டீலர்களில் இந்த காருக்கு ரகசியமாக முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.

மிக குறைவான பட்ஜெட்டில், குட்டி எஸ்யூவி தோற்றத்தில் வருவதால், இந்த கார் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாகவே இருக்கிறது. மைலேஜ், எஞ்சின், முன்பதிவு தொகை உள்ளிட்டத் தகவல்கள் ஸ்லைடரில் காத்திருக்கின்றன.

புக்கிங்

புக்கிங்

இந்த காருக்கான முன்பதிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால், ரெனோ டீலர்களில் ரகசியமாக முன்பதிவு செய்யப்படுகிறது. ரூ.25,000 செலுத்தி முன்பதிவு செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

'குட்டி' டஸ்ட்டர்

'குட்டி' டஸ்ட்டர்

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் வழக்கமான தோற்றத்தில் வெளியிட்டால், மாருதி, ஹூண்டாய் போன்ற ஜாம்பவான்களை எதிர்கொள்ள முடியாது என்ற எண்ணத்தில், இதனை ஒரு குட்டி எஸ்யூவியாகவே வடிவமைத்துள்ளது ரெனோ. எனவே, ஆட்டோமொபைல் துறையினர் இதனை மினி டஸ்ட்டர் என்று செல்லமாக அழைக்கின்றனர்.

 எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

ரெனோ க்விட் காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 800சிசி பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். அதிகபட்சமாக இந்த எஞ்சின் 57 பிஎச்பி பவரையும், 100 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இருக்கும். அடுத்த ஆண்டு 1.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் கொண்ட பவர்ஃபுல் மாடலும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

செயல்திறன்

செயல்திறன்

இந்த கார் 0- 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 20 வினாடிகள் எடுத்துக் கொள்ளும். அதிகபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகம் வரை செல்லும் அம்சத்தை கொண்டிருக்கும்.

 வடிவம்

வடிவம்

ரெனோ க்விட் கார் 3,680மிமீ நீளம், 1,50மிமீ அகலம் கொண்டது. அதேநேரத்தில், அதிக தரை இடைவெளி கொண்ட கார் மாடலாக வருகிறது. அதாவது, 180மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

பக்கவாட்டில் எஸ்யூவி கார்கள் போன்ற பிளாஸ்டிக் கிளாடிங் பட்டைகள், பாடி கலர் டெயில்கேட் ஸ்பாய்லர், 13 இன்ச் மற்றும் 14 இன்ச் வீல்கள், முன்புற கதவுகளுக்கு பவர் விண்டோஸ் வசதி, குரோம் அலங்காரம் செய்யப்பட்ட ஏசி வென்ட்டுகள், ஓட்டுனர் பக்கத்திற்கான ஏர்பேக் ஆப்ஷனலாக வழங்கப்படும். இதன் டாப் வேரியண்ட்டில் 7 இன்ச் கலர் டச்ஸ்கிரீன் மீடியா நவ் சிஸ்டம் இருக்கும். இதில், புளுடூத், ஆக்ஸ் இன் மற்றும் யுஎஸ்பி கனெக்ட்டிவிட்டி வசதிகள் கொடுக்கப்பட்டிருக்கும்.

 குறைவான விலை

குறைவான விலை

ரூ.3 லட்சம் முதல் 4 லட்சம் வரையிலான விலைப் பட்டியலில் வர இருக்கிறது. இந்த காருக்கான 98 சதவீத உதிரிபாகங்கள் உள்நாட்டிலிருந்து சப்ளை பெறப்பட உள்ளது.

 க்விட் விளம்பரம்

க்விட் விளம்பரம்

ரெனோ கார் நிறுவனத்தின் புதிய கார் விளம்பரத்திற்கு பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை கோர்வை செய்து கொடுத்துள்ளார். தற்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டு வரும் இந்த விளம்பரத்தில், தற்போது மார்க்கெட்டில் உள்ள ரெனோ கார்களை தவிர்த்து, விரைவில் வர இருக்கும் ரெனோ க்விட் காரும் இடம்பெற்றிருக்கிறது. இந்த விளம்பரத்தில் ரன்வீர் கபீர் தோன்றி, ரெனோ கார்களின் பிரபலப்படுத்துகிறார். யூ- ட்யூபில் வெளியிடப்பட்டு 10 நாட்கள் ஆன நிலையில், இந்த விளம்பரத்தை இதுவரை 1.15 மில்லியன் பார்வைகளை பெற்றிருக்கிறது.

Most Read Articles
English summary
Ahead of its launch next month, certain dealers of Renault India have begun accepting bookings for the Renault Kwid hatchback for an amount of Rs. 25,000.
Story first published: Wednesday, August 26, 2015, 10:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X