ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே மாடல் விற்பனைக்கு அறிமுகம் - அதிகாரப்பூர்வ தகவல்கள்!

By Saravana

கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட ரெனோ லாட்ஜி எம்பிவி காரின் ஸ்டெப்வே என்ற புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருக்கிறது. 7 சீட்டர் மற்றும் 8 சீட்டர் என இரு மாடல்களில் வந்துள்ளது.

எஸ்யூவி ரக கார்களில் இருக்கும் சில பிரத்யேக ஆக்சஸெரீகளை இந்த எம்பிவி காரில் கொடுத்து, வெளிப்புறத்தில் சில மாற்றங்களை செய்துள்ளனர். இந்த புதிய மாடலின் அதிகாரப்பூர்வ விலை மற்றும் வசதிகள் விபரங்களை ஸ்லைடரில் காணலாம்.

எஸ்யூவி ஆபரணங்கள்

எஸ்யூவி ஆபரணங்கள்

ஆபரணங்களில் கற்கள் பதித்தது போன்ற முகப்பு க்ரில் அமைப்பு, புதிய பம்பர் அமைப்பு, கன் மெட்டல் 5 ஸ்போக் அலாய் வீல்கள், எஸ்யூவி கார்கள் போன்று காரை சுற்றிலும் பிளாஸ்டிங் மற்றும் ஸ்கிட் பிளேட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதுதவிர, ஸ்டெப்வே டீகெல்களும் இதனை சாதாரண லாட்ஜியிலிருந்து வித்தியாசப்படுத்துகின்றன.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய ரெனோ லாட்ஜி ஸ்டெப்வே மாடல் 110 பிஎஸ் மாடலில் மட்டுமே கிடைக்கும். எஞ்சினில் மாற்றங்கள் இல்லை. இந்த மாடலின் 1.5 லிட்டர் கே9கே டீசல் எஞ்சின் 4,000 ஆர்பிஎம்.,மில் அதிகபட்ச சக்தியை வெளிப்படுத்தும். அதாவது, 108 பிஎச்பி பவரையும், 1,750 ஆர்பிஎம்.,மில் 245 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

மைலேஜ்

மைலேஜ்

லிட்டருக்கு 19.98 கிமீ மைலேஜை வழங்கும் அராய் சான்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரெனோ லாட்ஜி எம்பிவி காரில் 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் உள்ளது.

இடவசதி

இடவசதி

இந்த கார் 2,810மிமீ வீல் பேஸ் கொண்டிருப்பதால் உட்புறத்தில் மூன்று வரிசையிலும் மிகச்சிறப்பான இடவசதியை வழங்கும். இதேபோன்று, 207 லிட்டர் கொள்ளளவு கொண்ட பொருட்கள் வைப்பதற்கான பூட் ரூம் உள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசை இருக்கைகளை மடக்கி வைத்தால், பொருட்களுக்கான இடவசதியை அதிகரித்துக் கொள்ள முடியும்.

 இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

இந்த காரில் 7 இன்ச் மல்டிகலர் டச்ஸ்கிரீன் சிஸ்டம் உள்ளது. மேலும், மீடியா நவ் நேவிகேஷன் சிஸ்டமும் இருக்கிறது. புளுடூத், ஆக்ஸ்-இன் மற்றும் யுஎஸ்பி போர்ட் இணைப்பு வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த சிஸ்டத்தில் மூன்று ஆண்டுகளுக்கான வரைபட தகவல் அப்டேட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. காரின் வேகத்துக்கு தகுந்தவாறு ஆடியோ கன்ட்ரோல் சிஸ்டத்தின் வால்யூமை தானியங்கி முறையில் கூட்டிக் குறைக்கும் வசதியும் உள்ளது.

 வசதிகள்

வசதிகள்

மூன்று வரிசை இருக்கைகளுக்கும் தனித்தனி ஏசி வென்ட்டுகள், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சிஸ்டம், டியூவல் டோன் இன்டிரியர், க்ரூஸ் கன்ட்ரோல், ஓட்டுனர் இருக்கையை அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும் வசதி போன்றவை குறிப்பிடத்தக்கவை.

 பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

பிரேக் அசிஸ்ட், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார், ரியர் வியூ கேமரா, ஸ்பீடு லிமிட்டர் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.

 விலை விபரம்

விலை விபரம்

ரெனோ லாட்ஜி ஸ்டேப்வே மாடலின் 8 சீட்டர் மாடல் ரூ.11.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும், 7 சீட்டர் மாடல் ரூ.12.29 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அதாவது, சாதாரண லாட்ஜி காரைவிட ரூ.50,000 கூடுதல் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

Most Read Articles
English summary
Renault India, one of the country’s fastest growing automobile manufacturers, recently made its foray into India’s MPV segment with Renault Lodgy, a segment it pioneered globally more than three decades ago. With the introduction of the Renault Lodgy Premium Stepway Edition, the company achieved another milestone - of launching India’s first crossover MPV!
Story first published: Wednesday, June 17, 2015, 9:57 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X