இந்தியாவில் மல்டி பிராண்டு யூஸ்டு கார் விற்பனையில் இறங்கும் ரெனோ!

இந்தியாவில் பழைய கார் விற்பனை சந்தையில் கால் பதிக்க ரெனோ கார் நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது.

பல முன்னணி கார் நிறுவனங்களை போலவே முக்கிய நகரங்களில் பழைய கார் ஷோரூம்களை திறக்க உள்ளது ரெனோ கார் நிறுவனம்.

Renault Car

இதன்மூலம், தனது வர்த்தகத்தை ஸ்திரமானதாக மாற்றிக் கொள்ள திட்டமிட்டிருக்கிறது. ஆனால், அனைத்து பிராண்டு கார்களையும் விற்பனை செய்யும் விதத்தில் இந்த பழைய கார் ஷோரூம்களை திறக்கிறது.

பல்வேறு நாடுகளில் பழைய கார் விற்பனை சந்தையில் ரெனோ நிறுவனம் ஈடுபட்டிருப்பதால், அந்த அனுபவத்தை வைத்து இந்திய சந்தையிலும் சிறப்பான இடத்தை பெற திட்டமிட்டுள்ளது.

பழைய கார் விற்பனை மட்டுமின்றி, கார்களுக்கு கடனுதவி வழங்கும் சேவையை குறிப்பிட்ட வங்கியுடன் ஒப்பந்த அடிப்படையில் வழங்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles
English summary
Renault will work on a similar business model like other companies. They will re-sell all vehicles and will not only work with their products. The French manufacturer will use a multi-brand platform to sell used vehicles in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X