அடுத்த மாதம் ரிலீசாகும் ரெனோ குட்டி கார் பற்றி குட்டி குட்டி விஷயங்கள்!!

By Saravana

அடுத்த மாதம் 20ந் தேதி இந்தியாவில் புத்தம் புதிய குட்டிக் கார் மாடலை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ரெனோ கார் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

பட்ஜெட் விலையில், சிறப்பான அம்சங்களுடன் வர இருக்கும் இந்த புதிய குட்டிக் கார் மாடல் குறித்த சிறப்புத் தகவல்கள் ஸ்லைடரில் உங்களுக்காக காத்திருக்கிறது.

முதல் மாடல்

முதல் மாடல்

இந்தியாவில் முதலில் அறிமுகம் செய்யப்படும் முதல் ரெனோ கார் மாடல் இது.

நாமகரணம்

நாமகரணம்

இதுவரை XBA என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்டு வந்த இந்த புதிய கார் கயூ [Kayou] என்ற பெயரில் வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

 பிளாட்ஃபார்ம்

பிளாட்ஃபார்ம்

ரெனோ மற்றும் நிசான் கூட்டணியின் சிஎம்ஏ- எஃப் பிளாட்ஃபார்மில் இந்த புதிய குட்டிக் கார் உருவாக்கப்பட்டிருக்கிறது.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய குட்டிக் காரில் 3 சிலிண்டர்கள் கொண்ட 800சிசி பெட்ரோல் எஞ்சின் இருக்கும். 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் பொருத்தப்பட்டிருக்கும். இதே எஞ்சின் டட்சன் பிராண்டில் வரும் புதிய குட்டிக் காரிலும் பொருத்தப்பட உள்ளது. ஆனால், டிசைன் வெவ்வேறாக இருக்கும். இந்த எஞ்சின் 50 பிஎச்பி பவரை

சென்னையில் உற்பத்தி

சென்னையில் உற்பத்தி

இந்த புதிய கார் முதல்முறையாக சென்னையிலுள்ள ரெனோ - நிசான் கூட்டணி ஆலையில்தான் தயாரிக்கப்பட உள்ளது.

 பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

போதிய பாதுகாப்பு வசதிகள் மற்றும் அடிப்படையான சொகுசு வசதிகள் கொண்ட சிறப்பான குட்டி கார் மாடலாக இருக்கும்.

 இதர மார்க்கெட்டுகள்

இதர மார்க்கெட்டுகள்

இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்த பின்னர் பிரேசில் மற்றும் தென் ஆப்ரிக்க நாடுகளில் இந்த புதிய காரை விற்பனைக்கு கொண்டு செல்ல ரெனோ திட்டமிட்டிருக்கிறது.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ. 3 லட்சத்தையொட்டிய ஆரம்ப விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியாளர்கள்

போட்டியாளர்கள்

மாருதி ஆல்ட்டோ 800 மற்றும் ஹூண்டாய் இயான் கார்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும்.

குறிப்பு: மாதிரிப் படங்கள் ஸ்லைடரில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Renault India has been working on a small car project for a while now. The French manufacturer is now ready to present it globally in India by May, 2015.
Story first published: Wednesday, April 15, 2015, 16:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X