திப்பு சுல்தானை போற்றும் புதிய கோஸ்ட் மைசூர் எடிசன்: ரோல்ஸ்ராய்ஸ் அறிமுகம்

By Saravana

மைசூர் புலி என்று அடைமொழியுடன் நினைவுகூறப்படும் திப்பு சுல்தானை போற்றும் விதத்தில் புதிய கஸ்டமைஸ் கோஸ்ட் கார் மாடலை ரோல்ஸ்ராய்ஸ் வெளியிட்டிருக்கிறது.

ரோல்ஸ்ராய்ஸ் மைசூர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த கார் அபுதாபியில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் மைசூர்

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் மைசூர்

ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் மைசூர் என்ற பெயருக்கு திப்பு சுல்தானை போற்றும் வித்ததில் அமைவதோடு, அரேபிய மொழியில் மைசூர் என்றால் செல்வ வளத்தையும், சக்தியையும் குறிக்கும் சொல்லாக ரோல்ஸ்ராய்ஸ் குறிப்பிட்டுள்ளது. இரு பொருள் படும்படியான இந்த சொல்லை தனது லிமிடேட் எடிசன் கோஸ்ட் காருக்கு சூட்டி வெளியிட்டிருப்பதாக ரோல்ஸ்ராய்ஸ் தெரிவித்துள்ளது.

லிமிடேட் எடிசன்

லிமிடேட் எடிசன்

மொத்தம் 3 கார்கள் மட்டுமே கோஸ்ட் மைசூர் எடிசனில் விற்பனைக்கு கிடைக்கும். சில பிரத்யேக அம்சங்களுடன் இந்த கார் விற்பனைக்கு வருகிறது. அதனை அடுத்தடுத்த ஸ்லைடுகளில் காணலாம்.

புலி சின்னம்

புலி சின்னம்

மைசூர் புலி என்று திப்பு சுல்தானை குறிக்கும் நோக்கில், ரியர் வியூ கண்ணாடிக்கு பக்கத்தில் புலி சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது.

 தரம் அது நிரந்தரம்

தரம் அது நிரந்தரம்

மிக உயர்தரமான லெதர் இருக்கைகள் இருக்கின்றன. பின்புற இருக்கைகளுக்கு தனி பொழுதுபோக்கு வசதிகள் உண்டு.

ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ்

ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ்

ஸ்பெஷல் எடிசன் என்பதை காட்டும் விதத்தில், ஹெட்ரெஸ்ட்டிலும் புலி சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்டிரியர்

இன்டிரியர்

இரட்டை வண்ண இன்டிரியர் அலங்காரத்தில் கவர்கிறது. வழக்கம்போல் மர வேலைப்பாடுகள், தரமிக்க பாகங்கள் என கோடீஸ்வர வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை கச்சிதமாக பூர்த்தி செய்யும்.

வரிசை எண்

வரிசை எண்

கோஸ்ட் மைசூர் எடிசனில் வெளிவந்த முதல் காரை குறிப்பிடும் வரிசை எண்ணுடன் கூடிய சில் பிளேட்.

இரட்டை வண்ணம்

இரட்டை வண்ணம்

சாம்பல் நிற கூரை மற்றும் நீல வண்ணக் கலவையில் இந்த கார் கிடைக்கும்.

Most Read Articles
English summary

 ‘In this world I would rather live two days like a tiger, than two hundred years like a sheep.' Tipu Sultan - ‘The Tiger of Mysore.’ Tipu Sultan was the ruler of 18th century Mysore in India. In Arabic, Mysore also refers to wealth and power. The Bespoke Ghost Mysore Collection takes inspiration from this, and each of these extended wheelbase models are adorned with symbols of success. Ghost Mysore will be available exclusively in Abu Dhabi. Only three have been created.
Story first published: Friday, February 20, 2015, 13:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X