புதிய ரோல்ஸ்ராய்ஸ் டான்... பார்த்தாலே பரவசம்...!!

By Saravana

இங்கிலாந்தை சேர்ந்த ஆடம்பர கார் தயாரிப்பு நிறுவத்திடமிருந்து ஓர் புத்தம் புதிய கன்வெர்ட்டிபிள் மாடல் வெளியிடப்பட்டிருக்கிறது. திறந்து மூடும் கூரை அமைப்புடன் வருகை தரும் இந்த புதிய கார் ரோல்ஸ்ராய்ஸ் டான் என்ற பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதுவரை வெளிவந்த ரோல்ஸ்ராய்ஸ் கார்களில் இதுதான் மிகவும் அழகானதாக வர்ணிக்கப்படுகிறது.

பிராங்க்ஃபர்ட் ஆட்டோ ஷோவிற்கு முன்னதாக இந்த காரின் விபரங்களையும், படங்களையும் வெளியிட்டு ரசிகர்களை பரவசத்தில் ஆழ்த்தியிருக்கிறது ரோல்ஸ்ராய்ஸ். இந்த புதிய திறந்த அமைப்புடைய மாடல், இளம் வாடிக்கையாளர்களை குறிவைத்து விற்பனை செய்யப்பட உள்ளது. செயல்திறனிலும், சொகுசு அம்சங்களிலும், அழகிலும் அசரடிக்கும், இந்த காரின் அதிகாரப்பூர்வ படங்கள், தகவல்கள் ஸ்லைடரில் காத்திருக்கின்றன.

அமைதியான கேபின்

அமைதியான கேபின்

உலகில் விற்பனை செய்யப்படும் கூரை இல்லாமல், திறந்த அமைப்புடைய கார் மாடல்களில், மிகவும் அமைதியான கேபின் கொண்ட கார் மாடலாக தெரிவிக்கப்படுகிறது.

4 சீட்டர் மாடல்

4 சீட்டர் மாடல்

புதிய ரோல்ஸ்ராய்ஸ் டான் காரில் ஓட்டுனரை சேர்த்து 4 பேர் பயணிக்கும் வசதி கொண்டதாக இருக்கும். மரவேலைப்பாடுகளும், சொகுசு இருக்கைகளும் பயணிகளுக்கு ஓர் உச்சபட்ச சொகுசு அனுபவத்தை வழங்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

எஞ்சின்

எஞ்சின்

இந்த புதிய ரோல்ஸ்ராய்ஸ் காரில் பயன்படுத்தப்பட்டிருக்கும் 6.6 லிட்டர் வி12 எஞ்சின் அதிகபட்சமாக 563 பிஎச்பி சக்தியையும், 780 என்எம் டார்க்கையும் வாரி வழங்கும். இதன் செயல்திறனும் ஸ்போர்ட்ஸ் கார்களையே வியக்க வைக்கும் வகையில் இருக்கிறது.

செயல்திறன்

செயல்திறன்

இரண்டரை டன் எடை கொண்ட இந்த காரின் எஞ்சின் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.9 வினாடிகளில் தொட்டுவிடும். மணிக்கு 249 கிமீ வேகம் வரை சீறிச் செல்லும். அழகிலும், சொகுசிலும் மட்டுமல்ல, பெர்ஃபார்மென்சிலும் மிரட்டலாக இருக்கிறது.

கட்டமைப்பு

கட்டமைப்பு

இங்கிலாந்து நாட்டிலுள்ள ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் குட்வுட் ஆலையில் இந்த கார் முழுக்க முழுக்க மனித ஆற்றலில் கட்டமைக்கப்படுகிறது.

 எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

இந்த புதிய ரோல்ஸ்ராய்ஸ் கார் 3 லட்சம் அமெரிக்க டாலர் விலை மதிப்பில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்த காரின் டெலிவிரி துவங்கப்படும்.

மாடல் எண்ணிக்கை

மாடல் எண்ணிக்கை

ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் 4வது மாடலாக விற்பனைக்கு வருகிறது.

Most Read Articles
English summary
Rolls-Royce has revealed its all-new Drophead Luxury vehicle prior to its official debut at 2015 Frankfurt Motor Show. This now is their fourth model on offer and by far their best.
Story first published: Saturday, September 12, 2015, 13:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X