இதுதாங்க ரோல்ஸ்ராய்ஸின் புது கார்.. டிசைன் எப்படியிருக்கு?

By Saravana

அடுத்த ஆண்டு ரோல்ஸ்ராய்ஸ் நிறுவனத்தின் புத்தம் புதிய மாடல் விற்பனைக்கு வர இருக்கிறது. ரோல்ஸ்ராய்ஸ் டான் என்ற பிராண்டில் வெளிவர இருக்கும் இந்த புதிய மாடல் பழமையான டிசைன் தாத்பரியத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிரத்யேகத்தையும், சொகுசையும் விரும்புபவர்களுக்கு இது மிகச்சரியான சாய்ஸ் என்று ரோல்ஸ்ராய்ஸ் கூறுகிறது. கூடுதல் தகவல்கள் மற்றும் படங்களை ஸ்லைடரில் காணலாம்.

அடிப்படை மாடல்

அடிப்படை மாடல்

1952 ரோல்ஸ்ராய்ஸ் சில்வர் டான் மாடலின் டிசைன் அம்சங்கள் மற்றும் பெயருடன் இந்த புதிய ரோல்ஸ்ராய்ஸ் டான் கார் வர இருக்கிறது. இந்த கார் 1949 முதல் 1954 வரை தயாரிக்கப்பட்டது. மொத்தமே 28 கார்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டன.

Photo credit: Wiki Commons/Charles01

டிசைன்

டிசைன்

பழைய மாடலின் டிசைன் தாத்பரியத்தில் பல நவீன வசதிகளை புகுத்தி இந்த கன்வெர்ட்டிபிள் ரக மாடலை வடிவமைத்துள்ளனர். எனவே, இது ஒரு மிகவும் பிரத்யேகமான ரோல்ஸ்ராய்ஸ் கார் மாடலாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

புதிய மாடலின் எஞ்சின்

புதிய மாடலின் எஞ்சின்

இந்த புதிய காரில் 6.6 லிட்டர் வி12 எஞ்சின் ட்வின் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும். இந்த எஞ்சின் அதிகபட்சமாக 624 எச்பி பவரையும், 800 என்எம் டார்க்கையும் வழங்கும். செயற்கைகோள் உதவியுடன் இயங்கும் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸை கொண்டிருக்கும்.

விலை

விலை

இந்த புதிய ரோல்ஸ்ராய்ஸ் கார் 2.50 லட்சம் பவுண்ட் விலையில் விற்பனைக்கு வர இருக்கிறது. அடுத்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

Most Read Articles
English summary
Rolls-Royce is a name that is synonymous with premium luxury. The brand is in a league of its own and competition comes from its own product range. They have now announced the name of its soon to be unveiled Drophead model. Roll-Royce will christen its all-new sensuous drophead as ‘Dawn'.
Story first published: Friday, May 15, 2015, 11:59 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X