ஓரங்கட்டேய்... வருகிறது லிட்டருக்கு 30.1 கிமீ மைலேஜ் தரும் மாருதி செலிரியோ டீசல்!

By Saravana

அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் மாருதி செலிரியோ டீசல் மாடலின் தயாரிப்பு துவங்கியிருக்கிறது. இதையடுத்து, இந்த கார் இந்த மாதத்திலேயே விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

மிக குறைவான விலையில், அதிக மைலேஜ் தரக்கூடிய டீசல் காராக மாருதி செலிரியோ வருகிறது. மாருதி செலிரியோ டீசல் காருக்காக காத்திருப்பவர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

உற்பத்தி

உற்பத்தி

டெல்லி அருகே, மானேசரில் உள்ள மாருதி கார் தொழிற்சாலையில் இந்த காரின் உற்பத்தி துவங்கியிருக்கிறது. இதைத்தொடர்ந்து, இந்த காரை டீலர்களுக்கு அனுப்பும் பணிகளும் விரைவில் துவங்க உள்ளது.

டிசைன் மாற்றம்

டிசைன் மாற்றம்

தற்போது விற்பனையில் இருக்கும் செலிரியோ பெட்ரோல் மாடலுக்கும், செலிரியோவின் டீசல் மாடலுக்கும் வித்தியாசங்கள் ஏதும் இருக்காது. டீசல் மாடல் என்பதற்கான அடையாள எழுத்துக்கள் மட்டுமே முக்கிய மாற்றமாக இடம்பெற்றிருக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

மாருதி நிறுவனத்தின் புதிய 793 சிசி டீசல் எஞ்சினுடன் அறிமுகம் செய்யப்பட இருக்கும் முதல் கார் செலிரியோ என்பது குறிப்பிடத்தக்கது. இது 2 சிலிண்டர்கள் கொண்ட டீசல் எஞ்சின். அதிர்வுகளை குறைப்பதற்காக கேபின் மற்றும் கதவுகளில் விசேஷ சப்த தடுப்பு பாகங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

எஞ்சின் சக்தி

எஞ்சின் சக்தி

மாருதி செலிரியோ டீசல் காரில் இருக்கும் 793சிசி எஞ்சின் அதிகபட்சமாக 52 பிஎஸ் சக்தியையும், 150 என்எம் முடுக்குவிசையையும் வழங்கும்.

மைலேஜ்

மைலேஜ்

இந்த புதிய செலிரியோ டீசல் கார் லிட்டருக்கு 30.1 கிமீ மைலேஜ் தரும் என தெரிவிக்கப்படுகிறது. அப்படி வரும்பட்சத்தில், இந்தியாவின் மிக அதிக மைலேஜ் கொடுக்கும் கார் என்ற பெருமையை செலிரியோ பெறும்.

ஏஎம்டி மாடல்

ஏஎம்டி மாடல்

முதலில் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலில் மட்டும் மாருதி செலிரியோ டீசல் வர இருக்கிறது. பின்னர், பெட்ரோல் மாடலைப் போன்றே ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட டீசல் மாடலும் அறிமுகம் செய்யப்படும்.

 பாதுகாப்பு அம்சங்கள்

பாதுகாப்பு அம்சங்கள்

ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஏர்பேக்ஸ் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் டாப் வேரியண்ட்டில் வழங்கப்படும். அலாய் வீல்களும் இந்த காரின் டாப் வேரியண்ட்டில் நிரந்தர அம்சமாக இடம்பெற்றிருக்கும்.

எதிர்பார்க்கும் விலை

எதிர்பார்க்கும் விலை

ரூ. 4.70 லட்சம் ஆரம்ப விலையில் இந்த புதிய டீசல் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Perhaps the wait for it is finally going to come to an end by mid-2015 in India. Maruti Suzuki Celerio diesel hatchback has been spied sitting in the manufacturers stockyard.
Story first published: Wednesday, April 1, 2015, 10:27 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X