சுஸுகி ஐகே-2 கான்செப்ட்... இதுதான் மாருதியின் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் கார்!

By Saravana

ஜெனிவா மோட்டார் ஷோவில் சுஸுகி நிறுவனம் iK-2 என்ற புதிய ஹேட்ச்பேக் கான்செப்ட் கார் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கான்செப்ட் காரின் தயாரிப்பு நிலை மாடல்தான் இந்தியாவில் மாருதியின் புதிய பிரிமியம் ஹேட்ச்பேக் காராக விற்பனைக்கு வர இருக்கிறது.

எனவே, இந்த காரின் மீது இந்தியர்களின் கவனம் கூடுதலாக விழுந்துள்ளது. ஹூண்டாய் எலைட் ஐ20 காருக்கு நேரடி போட்டியாக களமிறக்கப்பட இருக்கும் மாருதி ஒய்ஆர்ஏ காரின் இந்த கான்செப்ட் மாடல் பற்றிய கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.


சர்வதேச மாடல்

சர்வதேச மாடல்

தற்போது இந்தியாவில் மாருதி ஒய்ஆர்ஏ என்ற குறியீட்டுப் பெயரில் இந்த கான்செப்ட் காரின் தயாரிப்பு நிலை மாடல் சோதனை செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக மாருதியின் தாய் நிறுவனமான சுஸுகி தெரிவித்துள்ளது.

 புதிய பிளாட்ஃபார்ம்

புதிய பிளாட்ஃபார்ம்

சுஸுகி நிறுவனத்தின் முற்றிலும் புதிய பிளாட்ஃபார்மில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தயாரிப்புக்கு செல்வதற்கு ஏற்ற அனைத்து அம்சங்களுடன் கொண்டதாகவே இந்த கான்செப்ட் கார் தோற்றமளிக்கிறது. எனவே, இந்த கான்செப்ட்டுக்கும், தயாரிப்பு நிலை மாடலுக்கும் டிசைனில் அதிக வித்தியாசங்கள் இருக்காது.

வடிவம்

வடிவம்

இந்த புதிய ஹேட்ச்பேக் கார் 4,023மிமீ நீளம், 1,920மிமீ அகலம் மற்றும் 1,450மிமீ உயரம் கொண்டது. 2,520மிமீ வீல் பேஸ் இருப்பதால் நல்ல இடவசதியை அளிக்கும்.

எஞ்சின்

எஞ்சின்

இந்த காரில் புதிய 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கிறது. இந்த புதிய எஞ்சின் தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் ஆல்ட்டோ, வேகன் ஆர் கார்களில் இருக்கும் 1.0 லிட்டர் கே சீரிஸ் எஞ்சினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறது. மேலும், டீசல் மாடலில் வழக்கம்போல் 1.3 லிட்டர் எஞ்சின் இடம்பிடிக்கும் என்று தெரிகிறது.

டயர்கள்

டயர்கள்

இந்த காரில் 225/45R18 டயர்கள் பொருத்தப்பட்டிருக்கின்றன. காரின் கம்பீரத்திற்கு இந்த டயர்கள் முக்கியமானதாக இருக்கிறது.

விலை

விலை

ரூ.5.5 லட்சம் ஆரம்ப விலையில் இந்த கார் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. ஸ்விஃப்ட் காருக்கு மேலான விலையில் இந்த புதிய கார் நிலைநிறுத்தப்படும்.

 விற்பனை எப்போது?

விற்பனை எப்போது?

இந்த ஆண்டு இந்தியாவிலும், அடுத்த ஆண்டு ஐரோப்பிய மார்க்கெட்டுகளிலும் இந்த புதிய கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
The gates of Geneva Motor Show will open to general public on 5th to 15th of March, 2015. Several manufacturers have teased us with their concept and future model images. Suzuki has revealed their compact hatchback concept at the grandest motor shows of them all.
Story first published: Friday, March 6, 2015, 15:34 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X