இந்தியாவில் புதிய மாருதி எஸ் க்ராஸ் அறிமுகம் - எஞ்சின், மைலேஜ் விபரம்

By Saravana

இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய மாருதி எஸ் க்ராஸ் கார் மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

அப்போது, இந்த புதிய க்ராஸ்ஓவர் ரக காரின் எஞ்சின் மற்றும் மைலேஜ் விபரங்கள் குறித்த தகவல்களை மாருதி வெளியிட்டது. இந்த புதிய மாருதி காரின் படங்கள் மற்றும் கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

எஞ்சின் ஆப்ஷன்

எஞ்சின் ஆப்ஷன்

இரு டீசல் மாடல்களில் மட்டும் விற்பனைக்கு வருகிறது. முதல் டீசல் மாடலில் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சின் இருக்கும். மற்றொரு மாடலில் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் 1.6 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் கொண்டதாக இருக்கும்.

கியர்பாக்ஸ் விபரம்

கியர்பாக்ஸ் விபரம்

1.3 லிட்டர் டீசல் எஞ்சின் மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாகவும், 1.6 லிட்டர் டீசல் மாடலில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் கொண்டதாகவும் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் போன்றவை இப்போதைக்கு இல்லை. ஆனால், சிறிது காலம் கழித்து அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயல்திறன்

செயல்திறன்

இந்த புதிய மாருதி க்ராஸ்ஓவர் காரின் 1.3 லிட்டர் டீசல் மாடல் 0- 100 கிமீ வேகத்தை 13.2 வினாடிகளிலும், 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் 0- 100 கிமீ வேகத்தை 11.3 வினாடிகளிலும் எட்டிவிடும்.

மைலேஜ்

மைலேஜ்

1.3 லிட்டர் மாடல் லிட்டருக்கு 23.65 கிமீ மைலேஜையும், 1.6 லிட்டர் மாடல் லிட்டருக்கு 22.7 கிமீ மைலேஜையும் தரும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

பாதுகாப்பு வசதிகள்

பாதுகாப்பு வசதிகள்

அனைத்து சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் சிஸ்டம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் அனைத்து வேரியண்ட்டுகளிலும் நிரந்தர அம்சமாக இடம்பெற்றிருக்கிறது. ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்ஸ், க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், மழை வந்தால் தானாக இயங்கும் வைப்பர் சிஸ்டம், 16 இன்ச் அலாய் வீல்கள், க்ளைமேட் கன்ட்ரோல், டியூவல் ஏர்பேக்ஸ் போன்றவை முக்கிய பாதுகாப்பு வசதிகளாக இருக்கும்.

ஸ்பெஷல் மாடல்

ஸ்பெஷல் மாடல்

இரு டீசல் மாடல்களும் மொத்தம் 8 வேரியண்ட்டுகளில் கிடைக்கும். வழக்கமான மாருதி மாடல்கள் போன்று இல்லாமல் புதிய வேரியண்ட் பெயர்களில் வருகிறது. 1.3 லிட்டர் மாடல் சிக்மா, சிக்மா ஆப்ஷனல், டெல்ட்டா, ஸீட்டா, ஆல்ஃபா ஆகிய வேரியண்ட்டுகளிலும், 1.6 லிட்டர் மாடல் டெல்ட்டா, ஸீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய வேரியண்ட்டுகளிலும் கிடைக்கும். இந்த புதிய கார் மாருதியின் நெக்ஸா என்ற பிரிமியம் ஷோரூம்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்யப்படும்.

மாருதி பெயர் இல்லை?

மாருதி பெயர் இல்லை?

மாருதியின் புது கார்னு மாய்ந்து மாய்ந்து எழுதுகிறோம். ஆனால், ஒரு இடத்தில் கூட மாருதி பேட்ஜை காணோம். உங்க கண்ணுக்கு தெரியுதா பாருங்க. இந்த கார் மாடல் மாருதி பேட்ஜ் இல்லாமல், சுஸுகி பேட்ஜில் இந்தியாவில் வருவதாக ஏற்கனவே ஒரு செய்தியில் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

Most Read Articles
English summary
Now Suzuki has finally confirmed its S-Cross in India will only be offered with diesel engine during launch. Petrol powered version of this crossover will be introduced at a later stage.
Story first published: Thursday, July 2, 2015, 12:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X