விளம்பரத்தில் பின்னி எடுக்கும் டாடா... போல்ட் காருக்கும் அசத்தல் விளம்பரம்!

By Saravana

கார் மார்க்கெட்டில் மீண்டும் உயிர்த்தெழும் முயற்சிகளை மிக தீவிரமாக செயல்படுத்தி வருகிறது டாடா மோட்டார்ஸ். டாடா ஸெஸ்ட் காருக்கு அந்த நிறுவனம் பயன்படுத்திய விளம்பர யுக்திகள் அனைவரையும் கவர்ந்ததோடு, ஸெஸ்ட் காரின் விற்பனையிலும் பிரதிபலித்து வருகிறது.

இந்தநிலையில், சமீபத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய டாடா போல்ட் காருக்கும் அதேபோன்றோரு புதிய விளம்பர யுக்தியுடன் பிரபல நாளிதழில் இன்று விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது. புதிய டாடா போல்ட் காருக்கு 4 பக்கத்திற்கு இலவச இணைப்பு பக்கங்களை அந்த நிறுவனம் இன்று வெளியிட்டிருக்கிறது.


 கார் சிறப்பம்சங்கள்

கார் சிறப்பம்சங்கள்

இந்த புதிய காரின் சிறப்பம்சங்களை விளக்கி கூறியிருப்பதோடு, புதிய போல்ட் காரை டெஸ்ட் டிரைவ் வாய்ப்பையும் வாசகர்கள் பெறும் விதத்தில் ஒரு ஸ்மார்ட் கார்டும் அந்த நாளிதழுடன் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் கார்டு

ஸ்மார்ட் கார்டு

"Multi-drive Rewards Card" என்ற பெயரில் நாளிதழுடன் ஓர் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இந்த கார்டுடன் சென்று டாடா ஷோரூம்களில் பெயர்களை பதிவு செய்து, டாடா போல்ட் காரை விரும்புவதற்கான காரணத்தை வித்தியாசமாக தெரிவிப்பவர்களுக்கு புதிய டாடா போல்ட் காரை பரிசாக பெறுவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.

மல்டி டிரைவ் வசதி

மல்டி டிரைவ் வசதி

புதிய 1.2 லிட்டர் ரெவோட்ரான் எஞ்சின் பொருத்தப்பட்டிருக்கும் புதிய டாடா போல்ட் காரில் மூன்றுவிதமாக எஞ்சின் இயக்கத்தை மாற்றியமைத்துக் கொள்ளும் மல்டி டிரைவ் வசதி இருக்கிறது. இதனையே விளம்பரத்தில் முன்னிலைபடுத்தியுள்ளது டாடா மோட்டார்ஸ்.

விற்பனை

விற்பனை

இதேபோன்ற விளம்பர யுக்தி மூலம் டாடா ஸெஸ்ட் காரின் விற்பனை நல்ல நிலைக்கு முன்னேறியுள்ளது. அதேபோன்று, புதிய டாடா போல்ட் காருக்கும் செய்யப்பட்டிருக்கும் இந்த புதிய விளம்பரம் மூலம் விற்பனை நல்ல நிலையை எட்டும் என்று அந்த நிறுவனம் நம்புகிறது.

டாடா போல்ட் காரின் A to Z விபரங்கள்

டாடா போல்ட் காரின் A to Z விபரங்கள்

புதிய டாடா போல்ட் காரின் ஆன்ரோடு விலை!

புதிய டாடா போல்ட் காரின் சிறப்பம்சங்கள்!

Most Read Articles
English summary
Tata Motors is continuing from where it left off with its aggressive marketing of the Zest compact sedan. The all-new Tata Bolt print advertising campaign was revealed today in The Times Of India daily, in a four-page advertorial supplement.
Story first published: Tuesday, February 3, 2015, 12:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X