ஏஎம்டி கியர்பாக்ஸுக்கு கைமேல் பலன்... ஒரே மாதத்தில் 3,000 நானோ கார்கள் முன்பதிவு!

By Saravana

கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய டாடா ஜென்எக்ஸ் நானோ காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

விற்பனைக்கு கொண்டு வரப்பட்டு ஒரே மாதத்தில் 3,000 புதிய ஜென்எக்ஸ் நானோ கார்களை விற்பனை செய்துள்ளதாக டாடா மோட்டார்ஸ் தலைவர் மாயங்க் பரீக் தெரிவித்துள்ளார். கூடுதல் தகவல்களை ஸ்லைடரில் காணலாம்.

அறிமுகம்

அறிமுகம்

கடந்த மாதம் 19ந் தேதி டாடா நானோ காரின் மேம்படுத்தப்பட்ட மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வடிவமைப்பில் மாறுதல்கள், கூடுதல் வசதிகளுடன் புதிய டாடா நானோ கார் வந்தது. குறிப்பாக, க்ளட்ச் பெடல் இல்லாத ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடலுடன் வந்ததே டாடா ஜென்எக்ஸ் நானோ கார் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அது பொய்க்கவில்லை என்பதை அதன் கடந்த ஒரு மாத விற்பனையிலிருந்து தெரிகிறது.

முன்பதிவு

முன்பதிவு

கடந்த ஒரு மாதத்தில் 3,000 டாடா ஜென்எக்ஸ் நானோ கார்கள் முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில், 70 சதவீத கார்கள் ஏஎம்டி கியர்பாக்ஸ் கொண்ட மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது மாதத்திற்கு சராசரி விற்பனை 1,400 ஆக இருப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

டாப் வேரியண்ட்டுக்கு வரவேற்பு

டாப் வேரியண்ட்டுக்கு வரவேற்பு

இதுவரை முன்பதிவு செய்யப்பட்ட 3,000 கார்களில் 1,000 ஜென்எக்ஸ் நானோ கார்களை டாடா மோட்டார்ஸ் டெலிவிரி கொடுத்துவிட்டதாம். குறிப்பாக, டாடா ஜென்எக்ஸ் காரின் ஏஎம்டி மாடலின் டாப் வேரியண்ட்டுக்கு அதிக வரவேற்பு இருக்கிறதாம். ஏனெனில், ஏஎம்டி மாடலில் பேஸ் வேரியண்ட்டைவிட டாப் வேரியண்ட் ரூ.20,000 மட்டுமே கூடுதலாக இருப்பதால், டாப் வேரியண்ட்டையே முன்பதிவு செய்கின்றனராம்.

வரவேற்பு ஏன்?

வரவேற்பு ஏன்?

டாடா ஜென்எக்ஸ் நானோ காரின் ஏஎம்டி மாடலில் க்ளட்ச் பெடல் இருக்காது. பிரேக் மற்றும் ஆக்சிலேட்டர் கன்ட்ரோல் மட்டுமே இருப்பதால், நகர்ப்புறத்தில் ஓட்டுவதற்கு எளிதாக இருக்கிறது. அதாவது, ஒரு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட காரை ஓட்டுவது போன்ற சுகத்தை தரும். இது தினசரி பயன்பாட்டுக்கு ஏற்றதாக மாறியுள்ளது. குறிப்பாக, ஆண், பெண் இருபாலருக்கும் சிறப்பான மாடலாக மாறியுள்ளது.

மைலேஜ்

மைலேஜ்

க்ளட்ச் பெடல் இல்லாமல் வரும் ஆட்டோமேட்டிக் கார்களில் மைலேஜ் குறைவாக இருக்கும். ஆனால், இந்த புதிய வகை ஆட்டோமேட்டட் மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட டாடா ஜென்எக்ஸ் நானோ கார் லிட்டருக்கு 21.9 கிமீ மைலேஜையும் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சாதாரண மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட மாடல் லிட்டருக்கு 25.4 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதனால், எரிபொருள் சிக்கனம் மிக்க காராகவும் இருக்கிறது.

முக்கிய அம்சங்கள்

முக்கிய அம்சங்கள்

புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஜென்எக்ஸ் நானோ காரில் பின்புறத்தில் பூட்ரூமை வெளியிலிருந்து திறப்பதற்கான டெயில் கேட் வசதி கொடுக்கப்பட்டிருக்கிறது. பெட்ரோல் டேங்க் கொள்ளளவு 15 லிட்டரிலிருந்து 24 லிட்டராக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. புளுடூத், யுஎஸ்பி போர்ட் வசதியுடன் கூடிய மியூசிக் சிஸ்டம், சார்ஜிங் பாயிண்ட் போன்ற பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள் இப்போது வாடிக்கையாளர்களை கவரும் அம்சங்களாக இருக்கிறது.

விலை வித்தியாசம்

விலை வித்தியாசம்

டாடா ஜென்எக்ஸ் காரின் ஏஎம்டி மாடல்தான் க்ளட்ச் பெடல் இல்லாமல் கிடைக்கும் கார்களில் மிக குறைவான விலை கொண்டது. சாதாரண மேனுவல் கியர்பாக்ஸ் கொண்ட ஜென்எக்ஸ் நானோ காருக்கும், ஏஎம்டி மாடலுக்கு ரூ.40,000 விலை வித்தியாசம் இருக்கிறது. இருப்பினும், இப்போது இருக்கும் கார்களில் குறைவான விலை கொண்ட ஏஎம்டி மாடல் ஜென்எக்ஸ் நானோ கார்தான் என்பதும் வாடிக்கையாளர்களை கவர காரணமாகியிருக்கிறது.

புதிய டாடா நானோ விலை விபரம்

புதிய டாடா நானோ விலை விபரம்

மேனுவல் கியர்பாக்ஸ் மாடல்கள்

எக்ஸ்இ- ரூ.1.99 லட்சம்

எக்ஸ்எம்: ரூ.2.29 லட்சம்

எக்ஸ்டி: ரூ. 2.49 லட்சம்

ஏஎம்டி மாடல்கள்

எக்ஸ்எம்ஏ: ரூ.2.69 லட்சம்

எக்ஸ்டிஏ: ரூ.2.89 லட்சம்

அனைத்தும் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையை அடிப்படையாகக் கொண்டது.

காத்திருப்பு காலம்

காத்திருப்பு காலம்

இப்போது டாடா ஜென்எக்ஸ் நானோ காருக்கு 6 வாரங்கள் வரை காத்திருப்பு காலம் இருக்கிறதாம். ஏனெனில், ஏஎம்டி கியர்பாக்ஸ் சப்ளையில் இருக்கும் தாமதமே இதற்கு காரணமாக குறிப்பிடப்படுகிறது. டெலிவிரியில் தாமதப்படுத்தாமல் இருந்தால் ஜென்எக்ஸ் நானோ காருக்கு முன்பதிவு செய்பவர்களை டாடா மோட்டார்ஸ் தக்க வைக்க முடியும்.

Most Read Articles
English summary
Tata GenX Nano gets overwhelming Response in the market.
Story first published: Monday, June 22, 2015, 10:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X